கருப்பு திரைவிமர்சனம்

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன்ஸ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கருப்பு.

கதை

கேரளாவில் இருந்து தனது மகளின் ஆபரேஷனுக்காக சென்னை வருகிறார் இந்திரன்ஸ். வந்த இடத்தில் அவர்களுடைய நகையை திருடர்கள் கொள்ளையடித்து விட்டு செல்ல, பின் அதனை போலீஸ் கண்டுபிடித்து கொடுக்கிறார்கள். ஆனால், 60 பவுன் தங்க நகைக்கு பதிலாக 45 பவுன் மட்டுமே திரும்ப தரப்படுகிறது. மேலும், இந்த நகையை இப்போது தரமுடியாது, நீதிமன்றத்தின் மூலமாகத்தான் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும் என போலிஸ் சொல்கிறார்கள்.
போலிஸ் சிபாரிசு மூலம் ஆர்.ஜே. பாலாஜியை சந்திக்க
இவர்களுடைய வழக்கை ஆர்.ஜே. பாலாஜி எடுத்து நடத்துகிறார். ஆனால், சுலபமாக முடிய வேண்டிய ஒரு வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்து இந்திரன்ஸிடம் இருந்து ஃபீஸ் வாங்கி கொண்டு சாப்பாடு பிரியாணி என பல செலவும் செய்து காலத்தை கடத்துகிறார் பாலாஜி. இந்த வழக்கு 4 மாதங்களுக்கு மேல் இழுத்துக்கொண்டே போக ஒரு கட்டத்தில் பாலாஜியால் நமக்கு நீதி கிடைக்காது என தெரிந்துகொள்கிறார் இந்திரன்ஸ். ஏன் இப்படி காசுக்காக காலம் தாழ்த்துகிறீர்கள்என்று கேட்ட இந்திரன்ஸை அடித்து இனி இந்த வழக்கை நீ எப்படி நடத்துற என்று பார்க்கிறேன் என சவால் விடுகிறார் ஆர்.ஜே.பாலாஜி
இந்திரன்ஸ் கோர்ட் வளாகத்தில் உள்ள கருப்புசாமியிடம் முறையிடுகிறார். கருப்புசாமி யாக இருக்கும் சூர்யா இந்திரன்ஸ் வேண்டுதலை ஏற்று நீதிமன்றத்தை சீரமைக்க மனிதனாக வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி சவாலில் கருப்பு சாமியான சூர்யா வெற்றி பெற்றாரா? இல்லை, கருப்பு கோட் போட்ட ஆசாமியான ஆர்.ஜே.பாலாஜி வெற்றி பெற்றாரா? நீதி கேட்டு வந்தவர்களுக்கு நீதி கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக சூர்யா நடிப்பிலும் பாடல்களிலும் சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். சூர்யா திரைக்கதையை கேட்டு நடித்ருக்கலாம் முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி சோதிக்கிறது. கதாநாயகியாக திரிஷா வழக்கறிஞர் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
வில்லனாக ஆர்.ஜே. பாலாஜி இன்னும் சிறப்பான வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். நீதிபதியாக நட்டி சிறப்பாக நடித்துள்ளார்.
இந்திரன்ஸ் நடிப்பு கண்கலங்க செய்கிறார். ஆடுகளம் நரேன், அனகா, ஷிவதா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜி.கே. விஷ்ணுவின் மிரட்டலான ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
சாய் அபயங்கரின் பாடல்கள் இசையும் பிண்ணனி இசையும் பராவாயில்லை ரகம்.

நீதிமன்றத்திற்கு வந்தால் நீதி கிடைத்துவிடும் என நம்புகிறோம், ஆனால் நீதிமன்றத்திற்கு வருவதே தண்டனைதான்” என தனது வசனம் மூலம் சொல்லி சாமானியனுக்கு போலிஸ் ஸ்டேஷன், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோர்களிடம் சென்றால் நியாயம் தற்போது கிடைப்பதில்லை என்பதை சொல்லியிருக்கிறார். அதை திரைக்கதையின் மூலம் இன்னும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. பாராட்டுக்கள்.

#actor surya#karuppu movie#New film#new release#rj balaji#Tamil movie#trisha#ungal cinemacinema newsmovie review
Comments (0)
Add Comment