‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வித் லவ் ( With Love )’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான அட்லீ அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜென் ஜீ ( Gen z) (தலைமுறையினரை) கவரும் வகையிலான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வித் லவ் ‘ ( With Love) எனும் திரைப்படத்தில் அபிஷன் ஜீவந்த், அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சரவணன், தேனி முருகன், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை K. சுரேஷ்குமார் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். பிரியா ரவி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இதில் கதையின் நாயகனான அபிஷன் ஜீவிந்த் மற்றும் கதாநாயகி அனஸ்வரா ராஜன், தான் பள்ளிப் பருவத்தில் காதலித்தவர்களிடம் சொல்லமுடியாத காதலை சொல்ல இணைந்து பயணிப்பதும் …அது தொடர்பான காட்சிகள், வசனங்கள் – பின்னணி இசை என அனைத்து அம்சங்களிலும் இருப்பதால்.. அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
இப்படத்தின் டைட்டில் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது .
பிப்ரவரி 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது
Link : https://www.youtube.com/watch?v=je1xB5ColOQ