ஹால் திரைப்படம் மூலம் தமிழில் கால் பதிக்கும் The Madras Story தயாரிப்பு & வினியோக நிறுவனம்!

*ஹால் – இந்த கிறிஸ்துமஸில் காதலின் நிறமிகு கதை!*

காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் மனதை மகிழ்விக்கும் தருணங்களை அழகாக இணைக்கும் ஒரு புதுமையான ரொமாண்டிக் எண்டர்டெய்னர்!!!

திரு. அபிமன்யு அவர்களால் துவங்கப்பட The Madras Story தயாரிப்பு & விநியோக நிறுவனம் தமிழில் முதல் முறையாக ஹால் திரைப்படத்தின் மூலம் களம் இறங்கியுள்ளது. ஜூபி தாமஸ் தயாரிப்பில், ஷேன் நிகம் நாயகனாக நடிக்க உருவாகியுள்ள இந்த ஹால், படத்தின் மூலம் வீரா இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு மனதை கவரும் இசையை தந்திருக்கிறார் வி. நந்தகோபன். மென்மையான, சொல்லப்படாத காதலை, வண்ணமயமான காட்சிகள், இனிமையான இசை மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்களின் மூலம் இப்படம் வெளிப்படுத்துகிறது. கிறிஸ்மஸ் வெளியீடாக அமைந்துள்ள ஹால், குடும்பங்களுக்கும் காதல் ஜோடிகளுக்கும் இதமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும்.

🍿 காதலும் ஒன்றுபட்ட உணர்வுகளும் கொண்ட கொண்டாட்டமான இந்த திரைப்படம், திரு. அபிமன்யு அவர்களால் தொடங்கப்பட்டுள்ள தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான The Madras Story ஆதரவுடன், ஹால் திரைப்படம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முழுவதும் வெளியாகிறது.

இந்த நிறுவனம் இதற்கு முன், கேரளாவில் ப்ளாக்பஸ்டர் “குடும்பஸ்தன்” படத்தை வெற்றிகரமாக விநியோகித்து, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. ஹால் படத்தின் மூலம், உணர்வுகளை மையமாகக் கொண்ட அர்த்தமுள்ள சினிமாவை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் தனது பயணத்தை The Madras Story தொடர்ந்து வருகிறது.

#hall movie#love film#new movie#ungal cinemacinema news
Comments (0)
Add Comment