*மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா ’ படத்தின் பாடலை, கர்நாடக துணை முதல்வர் திரு. D.K.சிவகுமார் பெங்களூருவில் வெளியிட்டார் !!*

பான்-இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விருஷபா ’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, பெங்களூருவில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கர்நாடக மாநிலத்தின் மதிப்பிற்குரிய துணை முதல்வர் திரு.D.K.சிவகுமார் கலந்துகொண்டு, பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அவரது பங்கேற்பு விழாவுக்கு தனித்துவமான பெருமையும் மரியாதையும் சேர்த்தது.

பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் பெற்ற நடிகர் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘விருஷபா ’ திரைப்படம், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றாகும். சமர்ஜித் லங்கேஷ் மற்றும் நயன் சாரிகா நடித்துள்ள இந்தப் புதிய பாடல், இளமையும், காதல்,உணர்வுகளும் நிறைந்த மென்மையான ரொமான்டிக் பாடல். இப்பாடல் வெளியான கணத்திலிருந்தே ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.

பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய துணை முதல்வர் திரு. D.K.சிவகுமார், படத்தின் தலைப்பின் அர்த்தத்தை உணர்ச்சிப்பூர்வமாக விளக்கினார். ‘விருஷபா ’ என்றால் ‘காளை’ என்றும், அது வலிமை, உறுதி மற்றும் நேர்மறை சக்தியை குறிக்கிறது என்றும் அவர் கூறினார். தனது கையில் உள்ள காளை டாட்டூவை குறிப்பிட்டு, இப்படம் வலிமையுடனும், வெற்றியுடனும் அமைய கடவுளிடம் பிரார்த்தித்ததாக பகிர்ந்து கொண்டார்.

2025 டிசம்பரில் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுக்குத் தயாராகும் ‘விருஷபா ’ படம், மிகுந்த நேர்மறை ஆற்றலைக் கொண்டதாக அவர் தெரிவித்தார். கர்நாடக மக்களின் சார்பில் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர், தயாரிப்பாளர்கள் முதலீட்டை மீட்டெடுத்து லாபம் ஈட்டி, மேலும் நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

மேலும், மோகன்லாலின் ‘விருஷபா ’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், இளம் நடிகர் சமர்ஜித் லங்கேஷ்க்கு 2026 வெற்றிகரமான ஆண்டாக அமையும் என்றும் வாழ்த்தினார். கன்னட திறமைகளை பான்-இந்திய அளவில் கொண்டு செல்லும் படக்குழுவின் முயற்சியைப் பாராட்டிய அவர், இளம் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் முழு ‘விருஷபா ’ குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இந்தப் பாடல் வெளியீடு, ‘விருஷபா ’ படத்தின் விளம்பரப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

நந்த கிஷோர் ( Nanada Kishore ) இயக்கியுள்ள ‘விருஷபா ’ படத்தில் மோகன்லால், சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவேதி, நயன் சாரிகா, அஜய், நேஹா சக்ஷேனா(Neha Saxena) கருடா ராம், வினய் வர்மா, அலி, அய்யப்பா P.ஷர்மா மற்றும் கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவில் இசை – சாம் CS, ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி, வசனங்கள் – எஸ்.ஆர்.கே., ஜனார்தன் மகரிஷி, கார்த்திக், ஒளிப்பதிவு – ஆன்டனி சாம்சன், சண்டை பயிற்சி – பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, கணேஷ் குமார், நிகில் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

கனெக்ட் மீடியா ( Connekkt Media )மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் (Balaji Telefilms Ltd), அபிஷேக் S வியாஸ் ஸ்டுடியோஸ் (Abishek S Vyas Studios) நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK பத்மகுமார், வருண் மாதுர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S. வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி, ஜூஹி பாரேக் மேத்தா ஆகியோர் தயாரிக்கின்றனர். இணை தயாரிப்பு – விமல் லஹோதி.( Vimal Lahoti)

தந்தை-மகன் உறவின் ஆழமான பிணைப்பைக் கொண்டாடும் வகையில், உணர்ச்சி, பிரம்மாண்டம் மற்றும் அதிரடி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு காவியமான திரைப்பயணமாக ‘விருஷபா ’ உருவாகியுள்ளது. மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.இப்படம் உலகம் முழுக்க வரும் நவம்பர் 6, 2025 வெளியாகிறது.

#celebrity events#New film#new song#press meet#sona song#Tamil movie#ungal cinema#virusiba moviecinema newsmovie album release
Comments (0)
Add Comment