டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன்பாலா இயக்கத்தில் ராம் கார்த்திக், கிரிஷா குருப், சிங்கம்புலி, முனீஸ்காந்த் மற்றும் பலர் நடித்து பிப்ரவரி 13 ல் வெளியாகும் படம் மைலாஞ்சி.
இசை இளையராஜா
ஒளிப்பதிவு செழியன்
கதை
ககதாநாயகி கிரிஷா க்ருப்புக்கு அவரது மாமனை கட்டிவைக்க அவரது அம்மா முடிவெடுக்கிறார். மாமனை பிடிக்காத கதாநாயகி யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுத்து காதலிக்க முயற்சி செய்கிறார். அப்போது வெளியூரில் இருந்து வந்து வசிக்கும் இன்ஜீனியர் ஒருவரை காதலிக்க முயற்சிக்கிறார். அவர் திடிரென சொந்த ஊருக்கு சென்ற விஷயம் தெரிய வருகிறது. இந்த சூழ்நிலையில்
சென்னையிலிருந்து ஊட்டிக்கு ஒரு பறவையின் புகைப்படம் எடுக்கச் செல்லும் நாயகன் அங்கு நாயகியான கிரிஷ் க்ருப்பை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே மலரும் காதலும், அந்த காதலில் உருவாகும் சிக்கல்களையும் தாண்டி அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக், தனது இயல்பான நடிப்பில் நம்மை கவர்கிறார். நாயகியாக கிரிஷா க்ருப், வெகுளி தன்மை கொண்ட பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு ஓரளவு உயிரூட்டுகின்றன. மற்றும் இதில் நடிததருக்கும் அனைவரும் அவரவர கதாபாத்திரம் உணரந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஊட்டியின் இயற்கை அழகை ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் செழியன் அழகாக படம் பிடித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இசை இந்த படத்தில் எதிர்பார்த்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாடல்களிலும் பின்னணி இசையிலும் அவரது வழக்கமான மெருகூட்டல் குறைவாக இருப்பது படத்திற்கு ஒரு குறையாக உணரப்படுகிறது.
இயக்குநர் அஜயன் பாலா பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இருப்பினும், அவரது முதல் இயக்குநர் முயற்சியான இந்த படத்தில் அந்த அனுபவத்தின் பலன் முழுமையாக வெளிப்படவில்லை. பழைய கதைக்களம் மற்றும் வழக்கமான திரைக்கதை அமைப்பு படத்தின் முக்கிய பலவீனமாக அமைந்துள்ளது. இன்னும் சுவாராஸ்யமான திரைக்கதை அமைத்திருந்நால் வெற்றி படமாக அமைந்திருக்கும். பாராட்டுக்கள். பார்க்கலாம்.