*2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் ஓப்பனிங் கொண்ட ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் விடுமுறை காலத்தில் குடும்பங்கள் கொண்டாடும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது!*

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்த விடுமுறை காலத்தில் குடும்ப பொழுதுபோக்கு படமாக வெற்றி பெற்றிருப்பது மட்டுமல்லாது, அதிகளவிலான பார்வையாளர்களையும் திரையரங்கிற்குள் வரவழைத்துள்ளது. பிரம்மாண்டம், உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவத்தை இந்த படம் பார்வையாளர்களுக்கு கொடுத்துள்ளது. ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய ஹாலிவுட் ஓப்பனிங் படமாக புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த ஆண்டில் அதிக முன்பதிவுகளைப் பெற்ற படங்களில் ஒன்றான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் வெளியான வெள்ளிக்கிழமை முதலே அனைத்து மொழிகளிலும் சிறப்பான திரையரங்க வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த உற்சாகத்தோடு பண்டிகை காலங்களில் குடும்பங்கள் இந்தப் படத்தைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

அதிகளவில் பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருவதோடு பாக்ஸ் ஆஃபிஸிலும் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றிருப்பது இந்திய சினிமாவில் புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. ’அவதார்: ஃபயர் மற்றும் ஆஷ்’ திரைப்படத்துடன் பிற முக்கிய வெளியீடுகளும் இணைந்து, ரூ. 50 கோடிக்கும் அதிகமான பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் பெற்றிருப்பது பண்டிகை காலத்தில் ரசிகர்களின் உற்சாகத்தை காட்டுகிறது.

ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட காட்சிகள், ஆழமான கதை சொல்லல் என மறக்க முடியாத பெரிய திரையனுபவத்தைக் கொடுக்கும் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் ஸ்பெஷல் ஃபார்மேட்ஸ் மற்றும் ப்ரீமியம் திரைகளுக்கான டிக்கெட் அதிகளவில் விற்பனையாவதை முன்னிட்டு வார இறுதி கலெக்‌ஷன் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

#avatar#avatar fire and ash#hollywood movie#New film#panindia film#ungal cinemacinema news
Comments (0)
Add Comment