மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவான ‘நாயகன்’ வெளிவந்து இன்றோடு 34 வருடங்கள் ஆகின்றன. அந்தப் படம் காலம் கடந்தும் போற்றப்பட்டு இன்று ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது.
நாயகன் (Nayagan) 1987 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும். இதன் இயக்குநர் மணிரத்னம் ஆவார். கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். இது, மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இத்திரைப்படம் 1988 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. டைம் வார இதழும், சிஎன்என்-ஐபிஎன் நிறுவனமும் இத்திரைப்படத்தை உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுமகளையும், பல தனியார் விருதுகளையும் வாங்கியது
கதை
ஒரு தொழிலாளர் சங்க தலைவரான தன் தந்தையை துப்பாக்கி குண்டுக்கு பலி கொடுத்து விட்டு, அதற்கு காரணமான ஒரு போலீஸ் அதிகாரியை கொன்றுவிட்டு, பம்பாய்க்கு தப்பி செல்கிறான் ஒரு சிறுவன். அந்த சிறுவன் வளர்ந்து, பெரியவனாகி தான் இருக்கும் பகுதியை ஆக்ரமிக்க வருபவர்களிடமிருந்து காப்பாற்றி, அந்த பகுதிக்கு தலைவனாகிறான். பலருக்கு நல்ல செயல்களைச் செய்யும் அவன், பல கடத்தல் தொழில்களிலும் ஈடுபடுகிறான். குறுகிய காலத்தில் அவன் மிகப்பெரிய Don ஆகிறான். ஊருக்கு நல்லவனாக தெரியும் அவன், அவன் குடும்பத்தார்க்கு எவ்வாறு தெரிகிறான்? உண்மையிலேயே அவன் ‘நல்லவனா? கெட்டவனா? இது தான் இந்த படத்தின் கதை.
கமல்ஹாசன் ‘வேலு நாயக்கர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சிறப்பான நடிப்பை அன்றே கொடுத்துள்ளார். மனைவியாக சரண்யா சிறப்பாக நடித்துள்ளார். நண்பராக ஜனகராஜ் நடிப்பும் அருமை. மகனாக நிழல்கள் ரவியின் நடிப்பும் அருமை. மகளாக நடித்தவரின் நடிப்பும் அருமை. நாசர், டேல்லிகணேஷ் என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்துசிறப்பாக நடிந்துள்ளனர். PC Sriram ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இசைஞானி இளையராஜா இசைதான்படத்திற்கு உயிர்.
இயக்குநர் மணிரத்னம் கேங்ஸ்டர் கதையை வேலுநாயக்கரின் பாத்திரத்தை அழகாக படைத்து எல்லோரும்ரசிக்கும்படியான படத்தைஅன்றே கொடுத்துள்ளார். இன்று மீண்டும் ரசிஙர்கள் மனதை கவரும். பாராட்டுக்கள்.