அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்ய மாதவன், கௌரி கிஷன், ஹரீஷ்பேரடி, வித்யாசாகர், சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் அதர்ஸ்.
கதை
பட ஓப்பனிங்கில் திருடும் நோக்கில் ஒருவன் கல்லை எடுத்து ரோட்டு நடுவில்போட அந்த வழியாக வந்த ஓரு வேண் கல் பட்டு கமிர வேண் தீப்பிடித்து எறிந்துவிடுகிறது.
இந்த சம்பவத்தை போலிஸ் அதிகாரியான ஆதித்ய மாதவன் விசாரனை செய்ய விசாரனையில் கல் போட்டவனும் வேணில் உள்ள மூன்று பெண்களும் இறநதிருக்கிறார்கள் வேண் டிரைவர் மட்டும் தப்பித்து ஓடி மறைந்துள்ளான் என்பதை கண்டுபிடிக்கிறார்.
டிரைவரை கண்டுபிடித்து விசாரித்தால் உண்மை தெரியும் என்று விசாரணையை தொடங்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் சுவாராஸ்யமான கதை.
கதாநாயகனாக ஆதித்ய மாதவன் அறிமுகம் என்றாலும் நடிப்பிலும் சண்டைக்காடாசியிலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக கௌரி கிஷன் டாக்டராக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், இயக்குநர் R சுந்தர்ராஜன், மனீஸ்காந்த், விதயாசாகர், ஹரீஷ்பேரடி என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையில் பாடலும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம். ஒளிபாபதிவும் அருமை.
இயக்குநர் அபின் ஹரிஹரன் மருத்துவத்துறையில் நடக்கும் Test Tube கதையை எவ்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லி வெற்றி படமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.