மினி ஸ்டுடியோ சார்பில் எஸ் வினோத் குமார் தயாரிப்பில் . அறிமுக இயக்குனர் சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், ஷிவாத்மிகா ராஜசேகர், மேகா ஆகாஷ், வி.டி.வி கணேஷ், துளசி, சந்தான பாரதி, சிபி ஜெயக்குமார், நம்ரிதா எம்.வி, சந்தியா வின்ஃப்ரெட் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஆரோமலே
சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவும், பிரவீன் ஆண்டனி எடிட்டிங் சேய்துள்ளனர்.
கதை
ஒரு பள்ளி மாணவன் இளைஞனாவது வரை அவன் வாழ்வில் நடக்கும் காதல் சம்பவம்தான் இந்த படத்தின் கதை
கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக உள்ளனர். கிசன் தாஷிற்கு பள்ளி பருவத்தில் தீராத விளையாட்டு பிள்ளை படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த படத்தை பார்த்த பிறகு அவருக்குள் காதல் வருகிறது. அதன் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளில் காதல் செய்கிறார், ஆனால் அது தோல்வியில் முடிவடைகிறது. பிறகு அவரது தந்தையின் கட்டாயத்தின் பேரில் ஒரு பிரபல மேட்ரிமோனி நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு பாஸாக வரும் ஷிவாத்மிகாவை பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. ஆனால் அவருக்கு காதல் என்றாலே பிடிக்காது. இந்த இருவரும் இறுதியில் சேர்ந்தார்களா இல்லையா? என்பதே ஆரோமலே படத்தின் கதை.
கிஷன் தாஸ் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் ஒவ்வொன்றிலும் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
ஹர்ஷத் கான் நகைச்சுவையிலும், குணச்சித்திரங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மேகா ஆகாஷ், VTV கணேஷ், துளசி, சந்தானபாரதி, சிபி ஜெயகுமார், நம்ரிதா MV, சந்தியா வின்ஃப்ரெட் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சித்துகுமார் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் சூப்பர். கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பிரவீன் ஆண்டனி எடிட்டிங் ஷார்ப்.
இயக்குநர் சாரங் தியாகு நீண்ட நாட்களுக்கு பிறகு அழகான காதல் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவராஸ்யமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.