பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன், சரத்குமார், தார்ணிகா, கல்கி, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கொம்புசீவி.
கதை
சரத்குமார் ரொக்கபுலி என்ற பெயரில் ஊரில் பெரிய கட்டபஞ்சாயத்து செய்து வருபவர், அந்த ஊரில் எது என்றாலும் முன்னால் வந்து நிற்பவர், அப்படியிருக்க ஷண்முக பாண்டியன் தாய், தந்தை இழந்து சிறு வயதிலே கஷ்டப்பட அவரை எடுத்து வளர்க்கிறார் சரத்குமார்.
இவர்கள் ஊர் விட்டு ஊர் போதை பொருள் கடத்தும் வேலை பார்ப்பவர்கள், இப்படி ஊரிலிருந்து போதை பொருள் கடத்தப்படுவதை அறிந்து நாயகி லைலா போலிஸ் அதிகாரியாக அந்த ஊருக்கு வந்ததுமே தன் அதிரடியை காட்டுகிறார்.
ஆனால், அவர் ஸ்டேஷனில் பிடித்து வைத்த 10 கிலோ போதை பொருள் தொலைந்து போகிறது. இதனால் ஷண்முக பாண்டியன் உதவியை நாட, அவரும் 10 கிலோ போதை பொருள் ரெடி செய்து தருகிறார்.
அந்த நேரத்தில் லைலா, ஷண்முக பாண்டியனை கையும் களவுமாக பிடிக்க, அதன் பின் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? இவர்கள் திருப்பி என்ன செய்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
ஷண்முக பாண்டியன் கிராமத்து நாயகனாக நடிப்பு டான்ஸ் பைட் என செம ஸ்கோர் செய்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் சரத்குமார். ஊரில் இருக்கும் ஒரு பெரிய மனுஷன் கதாபாத்திரத்தை நன்றாக செய்து கைதட்டல் பெறுகிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ஹீரோயின் தர்னிகா நன்றாக நடித்துள்ளார்.
காளி வெங்கட்,
கல்கி, மரியம்ஜார்ஜ், தருண் கோபி என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் இது பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
யுவனின் பாடல்கள், பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.
உண்மை கதையை எடுத்து திரைக்கதையை சூப்பராக அமைத்து கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம். பாராட்டுக்கள்.