*ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!*

*’தீயவர் குலை நடுங்க’ திரைப்படம், உலகமெங்கும் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!*

ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் சமீபத்தில் வெளியான டீசர் படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டிய நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை வெளியிட்டு, படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு. Npks, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ்,
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.

விரைவில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகும். நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

#Action king Arjun#New film#Tamil movie#Theeyavar kulai nadunga movie#ungal cinemacinema news
Comments (0)
Add Comment