‘ஹரி ஹர வீரமல்லு’ – விமர்சனம்

வைரங்களை திருடி ஏழைகளின் குடும்ப வாழ்வுக்கு வழிகாட்டும்   வீரனான நாயகன் பவன் கல்யாண், முகலாய மன்னர் பாபி தியோல் சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள கோஹினூர் வைரத்தை திருடுவதற்காக டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.  அவரது பயணம் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பதை முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் வரலாற்று கதையோடு, பல கற்பனை சம்பவங்களையும் சேர்த்து சொல்லியிருப்பது தான் ‘ஹரி ஹர வீரமல்லு’.

 

ஹரி ஹர வீரமல்லு என்ற வீரனாக நடித்திருக்கும் பவன் கல்யாண் இந்து மதத்தின் பெருமை பேசுவது, ஏழைகளுக்கு உதவுவது, இஸ்லாமிய மக்களுடன் நட்பு பாராட்டுவது என தனது ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அதிரடி நாயகனாக அசத்துகிறார்.

 நாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வால் ,முகலாய மன்னர்  ஒளரங்கசீப்பாக நடித்திருக்கும் பாபி தியோல், 

சத்யராஜ், நாசர், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபடேஹி, ஈஸ்வரி ராவ், விக்ரமஜீத் விர்க், சச்சின் கடேகர், ரகு பாபு, சுனில், கபிர் பெடி, சுப்பராஜு, கபிர் துஹான் சிங், தணிகலபரணி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 

 இசையமைப்பாளர் கீரவாணியின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் 

 ஒளிப்பதிவாளர்கள் ஞானசேகர் வி.எஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா படத்தை காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  

இந்து மதத்தை அழிக்கும் முகலாய மன்னர்களின் முயற்சிகள் மற்றும் இந்து மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் கொடுமைகளை கதையாக கொண்டு  பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் சாகசங்கள் நிறைந்த பொழுதுபோக்கு  படமாக  எழுதி இயக்கியுள்ளார் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா
ரேட்டிங் – 3 .5 / 5
Comments (0)
Add Comment