தலைவன் -தலைவி  – விமர்சனம்

விஜய் சேதுபதி – நித்யா மேனன் திருமணமாகி இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கிய சில மாதங்களிலேயே, குடும்பங்களில் வழக்கமாக ஏற்படும் சிறு சிறு சண்டை சச்சரவுகளாலும், அதனால் நடக்கக்கூடிய சம்பவங்களாலும் பிரிந்து விடுகிறார்கள். மூன்று மாதங்களாக பிரிந்திருக்கும் தம்பதி மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை படம்தான் தலைவன் -தலைவி

ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் அன்பான கணவராகவும், அம்மா மீது அக்கறையுள்ள பிள்ளையாகவும் நடித்திருக்கும் விஜய் சேதுபதி வழக்கமான நடிப்பில் நடிக்கிறார் .

 

நாயகியாக நித்யா மேனன் ,சித்திரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு ,நாயகனின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சரவணன் – தீபா சங்கர், நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் செம்பன் வினோத் – ஜானகி சுரேஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, வினோத் சாகர், ரோஷினி, செண்ட்ராயன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் தங்களது வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் பாடல்களும்  பின்னணி இசையும்  படத்திற்கு பக்க பலம் .

 ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஒளிப்பதிவில்  காட்சிகள் தரம் .

 சில குடும்பங்களில் நடக்கும் வழக்கமான குடும்ப சிக்கல்களை  கதையாக வைத்து குடும்ப சண்டை படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் பாண்டி ராஜ் . 

ரேட்டிங் – 3 / 5

 

Comments (0)
Add Comment