‘பன் பட்டர் ஜாம்’  – விமர்சனம்

Rain Of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில் இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் ராஜு, ஆதியா, பவ்யா, விக்ராந்த், மைக்கேல், பப்பு, சரண்யா, தேவதர்ஷினி, சார்லி, டாக்டர்.லங்கேஷ், நிஹாரிகா, பாரதி, லங்கேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பன் பட்டர் ஜாம்’

சிறுவயதில் இருந்தே ராஜுவும், மைக்கேலும் நெருங்கிய நண்பர்கள் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்க்கிறார்கள். நாயகன் ராஜு, தனது சக மாணவியான நாயகி பவ்யாவும் காதலிக்கிறார்கள். பவ்யாவை ஒருதலையாக காதலிக்கும் மைக்கேல், ராஜுவிடம் சண்டை போட்டு பிரிகிறார்.

மறுபக்கம் ராஜுவின் அம்மா சரண்யா பொன்வண்ணன், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவதர்ஷினி மகளான ஆதியாவுக்கும், ராஜுக்கும் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.

ஆனால்  தேவதர்ஷினி மகளான  ஆதியா விஜே பப்புவை காதலிக்கிறார்.

முடிவில் ராஜு தன் காதலியான  பவ்யா ட்ரிகாவுடனான காதல்   திருமணத்தில் முடிந்ததா ?

இணை பிரியா நண்பனாக இருந்த மைக்கேலுடன் மீண்டும் ராஜு ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான்  ‘பன் பட்டர் ஜாம்’  

நாயகனாக வரும் ராஜு அறிமுக படத்திலேயே வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.காதல் ,நட்பு, காமெடி, சண்டை,எமோஷனல் என அனைத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி வரும் பவ்யா ட்ரிகா,அழகிலும் நடிப்பிலும் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்.  மற்றொரு நாயகி நடித்திருக்கும் ஆதியா துறுதுறுவென நடிப்பில் இயல்பாக நடிக்கிறார் 
ஆதியாவின் காதலனாக நடித்திருக்கும் விஜே பப்பு, வரும்  காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது. நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் மைக்கேலின் நடிப்பு சிறப்பு
சிறப்பு வேடத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், வரும் காட்சிகள் ஸ்டைலாகவும் மாஸாகவும்  இருக்கிறது சரண்யா பொன்வண்ணன், தேவர்தர்ஷினி, சார்லி ஆகியோரது அனுபவ நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பு .. 

பாபு குமார் IE ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம். 

காதலில் முடியும் திருமணம், பெரியவர்கள் நிச்சயித்த திருமணம் இதனை கதையாக வைத்து நகைச்சுவை கலந்து குடும்பங்கள்  கொண்டாடும் படமாக பாராட்டும்படி இயக்கியுள்ளார்  இயக்குநர் ராகவ் மிர்தாத்  

ரேட்டிங் – 3.5 / 5

 

Comments (0)
Add Comment