’ஜோரா கைய தட்டுங்க’ – விமர்சனம்

பிரபலமான மேஜிக் கலைஞரின் மகனான யோகி பாபு, தந்தை இறப்புக்குப் பிறகு மேஜிக் கலைஞராகி விடுகிறார். ஆனால், அவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள். இதனால், தந்தையைப் போல் அவரால் அந்த துறையில் யோகி பாபுவால் பிரகாசிக்க முடியாமல் போகிறது .

ஒருநாள் யோகிபாபு தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகில், முன்று இளைஞர்கள் யோகிபாபுவை அடிக்கடி அவரது தொழிலை கிண்டல் செய்தும் ,தேவையில்லாத பிரச்சனைகள் செய்தும் அவரை வெறுப்பேற்றுகின்றனர் .

இதனையடுத்து  யோகிபாபுவுக்கு பிரச்சனை செய்யும் ஒருவன் மர்ம மான முறையில் இறந்து போகிறான் . அதன் பிறகு அங்கு சில கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன. 
இந்த கொலை வழக்கை விசாரிக்கும்   ஹரீஷ் பெராடி. முதற் கட்ட விசாரணை மேற் கொள்ளும்  போது சில மாதங்களாக யோகிபாபு காணாமல் போனது அவருக்கு தெரிய வருகிறது .
முடிவில் இந்த கொலைகளை செய்த மர்ம நபர்  யார்.?

காணாமல் போன யோகிபாபுவை போலீசார் கண்டுபிடித்தார்களா ? இல்லையா?

என்பதை சொல்லும் படம்தான்  ’ஜோரா கைய தட்டுங்க’ .
மேஜிக் நிபுணராக நடித்திருக்கும் யோகிபாபு தனது வழக்கமான காமெடியின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான சில செண்டிமெண்ட் காட்சிகளில் யோகிபாபு இயல்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .
கதாநாயகியாக வரும் சாந்திராவ், போலீஸ் அதிகாரியாக வரும் ஹரிஷ் பெராடி, யோகி பாபுவின் உதவியாளராக வரும் கல்கி, அருவிபாலா,வசந்தி, மணிமாறன், தயாரிப்பாளர்  ஜாகீர் அலி  என படத்தில்  நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .
இசையமைப்பாளர்  எஸ்.என்.அருணகிரி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. 
மது அம்பர்ட் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் . 
மேஜிக் கலைஞன் ஒருவனது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வேகமில்லாத திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வினிஷ் மில்லினியம்.  
ரேட்டிங் – 2.5  / 5
Comments (0)
Add Comment