’ரெட்ரோ’ – விமர்சனம்

2டி என்டர்டெயின்மென்ட் & ஸ்டோன் பெஞ்ச் – ஜோதிகா – சூர்யா தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், ஸ்வாசிகா, விது,கருணாகரன், சுஜித் ஷங்கர், நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ரெட்ரோ’

மிகப்பெரிய தாதா ஜோஜூ ஜார்ஜ் இவரது மனைவி ஸ்வாசிகா இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள்.

ஒருநாள் இவர்கள் தொழில் சாலையில் வேலை பார்க்கும் வாட்ச்மேட் இறந்துவிட அவருடைய குழந்தை சூர்யாவை ஸ்வாசிகா எடுத்து வளர்க்கிறார்.

இந்நிலையில் வளர்ப்பு தாய் ஸ்வாசிகா இறந்துவிட, ஜோஜூ ஜார்ஜ் சூர்யா மீது வெறுப்பை காட்டுகிறார்.

ஒரு கட்டத்தில் ஜோஜூ ஜார்ஜ் உயிருக்கு எதிரிகளால் ஆபத்து வர சிறுவனான சூர்யா அவரை காப்பாற்றுகிறார். இதனையடுத்து ஜோஜூ ஜார்ஜ் சூர்யாவை மகனாக ஏற்றுக்கொள்கிறார்.

ஜோஜூ ஜார்ஜிடம் வலது கரமாக இருக்கும் சூர்யா சிறு வயதில் தான் பார்த்த கால் நடை மருத்துவர் பூஜா ஹெக்டேவை பார்த்ததும் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்.

 
இந்நேரத்தில் தன் காதலி பூஜா ஹெக்டேவுக்காக அடிதடி , கொலை என அனைத்திலிருந்தும் விலகி பூஜா ஹெக்டேவை திருமணம் செய்து அமைதியாக வாழ ஆசைப்படுகிறார்.
 
திருமண நேரத்தில் தங்க மீன் கடத்தலில் ஏற்படும் பிரச்சனையால் நடக்கும் மோதலில் ஜோஜூ ஜார்ஜ் பூஜா ஹெக்டேவை கொல்ல முயலும் போது ஜோஜு ஜார்ஜ் வலது கையை சூர்யா வெட்டி விடுகிறார்.
இந்த பிரச்சனையால் சூர்யா சிறையில் அடைக்கப் படுகிறார் .
மீண்டும் வன்முறையை கையிலெடுத்த சூர்யாவை பிடிக்காமல் அவரை விட்டு விலகி விடுகிறார் பூஜா ஹெக்டே .
சிறையில் இருக்கும்போதே அந்தமான் தீவில் பூஜா ஹெக்டே இருப்பது தெரிந்தும் ஜெயிலரின் உதவியால் அங்கிருந்து தப்பி சென்று அந்தமானுக்கு செல்கிறார்
அந்த தீவில் நாசரும் அவரது மகன் விதுவும் மக்களை அடிமையாக்கி சர்வாதிகாரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அடிமையாக்கப்பட்ட மக்கள் அனைவரும் திரிசூல வடிவில் வேல் முத்திரையுடன் பிறக்கும் ஒருவர் கடவுளாக வந்து தங்களை காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கையில் அந்தமான் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
ஒரு கட்டத்தில் திரிசூல வடிவில் வேல் முத்திரையுடன் பிறந்த சூர்யாவை கண்டதும் அனைவரும் தங்களை காப்பாற்ற வந்த கடவுளாக பார்க்கின்றனர் .
முடிவில் சூர்யா அந்தமான் தீவில் அடிமைகளாக வாழும் மக்களை காபாற்றினாரா ?
ஜோஜு ஜார்ஜ் சூர்யாவிடம் இருந்து தங்க மீனை கைப்பற்றினாரா?
பூஜா ஹெக்டே மீண்டும் சூர்யாவுடன் இணைந்தாரா ? என்பதை சொல்லும் படம்தான் ’ரெட்ரோ’
 
கதையின் நாயகனாக சூர்யா சிரிக்காமல் சிரிப்பே வராது என்கிற கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி நாயகனாகவும், நடனத்திலும் , உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .
கதைக்கு முக்கியத்துவமாக இயல்பாக நாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே
வில்லனாக நடித்திருக்கும் ஜோஜு நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் , விது , ஜெயராம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பக்க பலமாக நடிப்பில் இருக்கின்றனர் .

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அசத்தல்.

ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
தந்தைக்கும் – மகனுக்கும் நடக்கும் மோதலை மையமாக வைத்து குடும்ப செண்டிமெண்ட், கல்ட் சண்டைக்காட்சிகள், வித்தியாசமான படு வேகமான ஆக்‌ஷன் காட்சிகள் என அனைவரும் ரசிக்கும் ஆக்க்ஷன் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

ரேட்டிங் – 3 / 5

Comments (0)
Add Comment