‘ட்ராமா’ – விமர்சனம்

திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமடையும் சாந்தினிக்கு, ஒரு மர்ம போன் கால் மூலம் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா தனது கணவர் விவேக் பிரசன்னா இல்லை, என்ற உண்மை தெரிய வருவதோடு, அதே போன் கால் மூலம் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ அனுப்பப்பட்டு மிரட்டப்படுகிறார்.

ஆட்டோ ஓட்டுநரின் மகளான பூர்ணிமா ரவி, தன் காதலன் பிரதோஷினால் கர்ப்பமடைந்து ஏமாற்றப்படுவதோடு, பிரதோஷின்உண்மையான பின்னணி பற்றி தெரிந்து கொண்டு அவருடன் வாழவே கூடாது, என்ற முடிவுக்கு வருகிறார்.

இதே நேரத்தில்   கார் மெக்கானிக்கான ஈஸ்வர், அவருடைய நண்பர் மூலம் கார் திருடி விற்று வருகிறார்.

ஒருநாள் இரவில் விலையுயர்ந்த காரை ஈஸ்வர் நண்பருடன் திருடி செல்லும் வழியில் போலீசில் மாட்டிக் கொள்கிறார். 
போலீஸ் இன்ஸ்பெக்டரான சஞ்சய் காரை சோதனை செய்யும் போது  கார் பின்புற டிக்கியில்  பிரதோஷ்  பிணமாக கிடக்கிறார்.
முடிவில் பிரதோஷை கொலை செய்த கொலையாளி யார் ? கொலைக்கான காரணம் என்ன? 

கர்ப்பமாக இருக்கும்  சாந்தினி தமிழரசன் –விவேக் பிரசன்னா தம்பதியருக்கு  குழந்தை பிறந்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’ட்ராமா’  

நாயகனாக நடித்திருக்கும் விவேக்  பிரசன்னா இயல்பான நடிப்பில் உடல் மொழியில் மனைவி மீது காட்டும் அக்கறை, குழந்தை இல்லையே என்று தவிப்பது, தன் நிலை தெரிந்ததும் துடிப்பது  என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
விவேக்  பிரசன்னா மனைவியாக நடித்த சாந்தினி தமிழரசன் குழந்தைக்காக ஏங்கி தவிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்ணிமா ரவி மற்றும் பிரதோஷ் இருவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள். 
விவேக் பிரசன்னாவின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சஞ்ஜீவ் மற்றும் மாரிமுத்து, பிரதீப் கே.விஜயன், ரமா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பக்க பலம் .
ஆர் எஸ் ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. 
அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதை ஒட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது.
இன்றைய சமுகத்தில் பல இளைய தம்பதியர் சந்திக்கும்  குழந்தையின்மை பிரச்சனையை மையமாக கொண்ட கதையுடன் செயiற்கை கருத்தரிப்பு மருத்துவமனை மூலம் நடக்கும் குற்றங்களை வைத்து ஆதரவற்ற அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்து  சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் 
ரேட்டிங்  : 3  / 5

 

Comments (0)
Add Comment