Take a fresh look at your lifestyle.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஜெய் ஹனுமான்’ சீக்வலின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது

22
‘ஹனுமான்’ படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா, மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஜெய் ஹனுமான்’ படத்தைத் தொடங்க இருக்கிறார். அவரது பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியான இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக படத்தைத் தயாரிக்க உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரீ-லுக் போஸ்டர், பழங்காலக் கோவிலை நோக்கிச் செல்லும் ஹனுமானைக் கொண்டிருக்கும் காட்சிகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசீகரிக்கும் போஸ்டர் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக நாளை வெளியிடப்படும் பெரிய அப்டேட்டுக்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த ஹனுமான் கதாபாத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும், யூகங்களும் இப்போதே கிளம்பியிருக்கிறது.

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் ஆகியோர் தாங்கள் தயாரிக்கும் படத்தின் உயர் தரத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் புகழ் பெற்றவர்கள். ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படம் உயர் தயாரிப்பு மதிப்புகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப தரங்களைக் கொண்டிருக்கும் என்பது உறுதி.