நூறு கோடி இழப்பீடு கேட்டு மோசடியால் இழப்பை ஏற்படுத்தி மன உளைச்சலடைய செய்த பெடரல் வங்கிக்கு நுகர்வோர் நோட்டீஸ் அனுப்பிய நடிகர்
திரைப்பட நடிகர் கோபி “சமூக உணர்வுகள்”, “கண்ணீர் அஞ்சலி”, “பசுமை”, “முயற்சி”, “அகதி”, போன்ற “விழிப்புணர்வு குறும்படங்கள்” மற்றும் “முதல் மாணவன்”, “வைரமகன்”, “வீரக்கலை” ஆகிய “கருத்து” திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது “உச்சம் தொடு”, “எம்.ஜி.ஆர் ரசிகன்” படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2008ம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் பதவி வகித்து சமூதாயத்தில் ரத்த தானம், உடல் தானம், சுற்றுசூழல் பாதுகாப்பு, கல்வி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தற்போது வரை பொது மக்களுக்கு சமுதாய சேவைகளை செய்து வருகிறார். மேலும் ஆர்.எஸ்.ஜி ஏஜென்சிஸ் என்ற தொழில் நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார். அந்நிறுவனத்தின் வங்கி கணக்கு நாமக்கல் சேந்தமங்கலம் சாலை ரங்கர் சன்னதி தெருவில் இயங்கி வரும் பெடரல் வங்கி தனியார் லிமிடெட் கிளையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கையின் போது தொழில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அப்போது 10% அதிகபட்ச கடன் வழங்க மறுத்து, ஆர்.எஸ்.ஜி ஏஜென்சிஸ் கணக்கை பெடரல் வங்கி NPA செய்து, கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சட்ட விதிகளை மீறி பெடரல் வங்கி கிளையின் தலைமை நிர்வாக இயக்குநர் P.ஷியாம் ஸ்ரீனிவாசன், அங்கீகார அதிகாரி C.R.ரூப்சந்த், கிளை மேலாளர் P.சுரேஷ் பாபு, பெடரல்
வங்கி நில மதிப்பீட்டு பொறியாளர் R.சுந்தர்ராஜ் அவரது மகன் V.S.அருண் விஜய் ஆகியோர்கள் கூட்டு சதித்திட்டம் தீட்டி, சட்டவிரோதமாக, மோசடியாக பெடரல் வங்கி நுகர்வோரான நடிகர் கோபியின் நிலங்களை அபகரித்துள்ளார்கள். மேலும் மோசடிகளை மறைக்க பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் பெடரல் வங்கியினர், கடந்த எட்டு வருடங்களாக பெடரல்
வங்கி நுகர்வோரான நடிகர் கோபிக்கு பல்வேறு இழப்பை ஏற்படுத்தி பாதிப்படைய செய்து மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ள காரணத்திற்காக பெடரல் வங்கி நுகர்வோரான நடிகர் கோபி கடந்த ஆகஸ்ட் மாதம் பெடரல் வங்கியிடம் நூறு கோடி இழப்பீடு கேட்டு நுகர்வோர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பெடரல் வங்கி தனது குற்றங்களை மறைத்து தற்போது பதில் அறிவிப்பு அனுப்பியுள்ளது. அதனால் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் பெடரல் வங்கி செய்துள்ள மோசடிகளுக்கான ஆவண ஆதார சாட்சியங்களை வழங்கி சட்டப்படி பெடரல் வங்கியிடம் நூறு கோடி இழப்பீடு பெற்று தர கோரி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக நடிகர் கோபி செய்தியாளர்களிடம் கூறினார்