Take a fresh look at your lifestyle.

சிறை விமர்சனம் – ஆழமான உணர்வுகள் -நல்லதொரு சினிமா

81

கொலை வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் ஆண்டு கணக்கில் அடைபட்டு கிடக்கிறான் இளைஞன் அப்துல் ( அக்ஷய் குமார்). அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்த கைவிலங்கிட்டு போலீஸ் ஏட்டு ( விக்ரம் பிரபு) மற்றும் இரண்டு போலீசார் பஸ்ஸில் அழைத்து செல்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல அப்துல் முயல்கிறான். ஒரு வழியாக அவனை கண்டுபிடிக்கும் போலீஸ் அவனை கவனத்துடன் பிடித்து அழைத்து செல்கின்றனர் அப்போது போலீஸ் ஏட்டுவிடம் தனது காதல் கதையை சொல்கிறான் அப்துல். உருக்கமான அந்த கதையை கேட்டு ஏட்டு எடுக்கும்முடிவு என்ன? அப்துல் காதல் என்னவாகிறது என்பதற்கு விறுவிறுப்பான பதில் அளிக்கிறது சிறை.
போலீஸ் பாணி படம் என்றாலே அதற்கு ஒரு ஃபார்முலாவை தமிழ் படத்தில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் ஆனால் அந்த ஃபார்முலாவை இந்த படம் உடைத்திருக்கிறது. அதேபோல் ஒரு ஹீரோ தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் கதாபாத்திரத்தில் சினிமாத்தனமாக இல்லாமல் எதார்த்தமான மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஏட்டுவாக விக்ரம் பிரபு நடித்திருக்கிறார்.

தொடக்க காட்சியிலேயே ரவுடிகள் மிளகாய் பொடி வீசி நடத்தும் தாக்குதலில் விக்ரம் பிரபு தடாலடி ஆக்சன் காட்டி நிமிர வைக்கிறார்.

கைதி அப்துல்லின் காதல் கதையைக் கேட்கும் விக்ரம் பிரபு அந்த காதலை சேர்த்து வைக்கும் முடிவை மனதில் நிறுத்திக் கொண்டு கைதியின் காதலி வந்தவுடன் அவர்கள் இருவரையும் மனம் விட்டு பேச வைத்து இந்த காதல் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு விதையை ரசிகர்கள் மனதுக்குள் விதைத்து வைக்கிறார் விக்ரம் பிரபு.

விசாரணை கைதி அப்துல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுகம் அக்ஷய்குமார் தயாரிப்பாளரின் மகன் என்பதால் எந்த சலுகையும் காட்டாமல் கதாபாத்திரமாகவே அவரை மாற்றி நடிக்க வைத்திருப்பது இயக்குனர் எடுத்திருக்கும் ரிஸ்க் என்றாலும் அதில் நடிகரையும் தேர்ச்சி பெற வைத்து இயக்குனரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதுதான் சிறப்பு.