Take a fresh look at your lifestyle.

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ, “மஹாகாளி”

26

பிரசாந்த் வர்மா PVCU3 இன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ மஹாகாளி என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார், RK துக்கல் வழங்க, பூஜா அபர்ணா இயக்கத்தில், RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கிறார்.

பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் திரைப்படமாக பிரசாந்த் வர்மா எழுதி இயக்கிய ஹனுமான் பான் இந்தியா பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. PVCU3 சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ 3வது திரைப்படத்தை அறிவித்துள்ளார். RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் இப்படத்தை தயாரிக்க, RK துக்கல் வழங்குகிறார். RKD Studios இந்தியாவின் முன்னணி மோஷன் பிக்சர் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கையகப்படுத்தும் நிறுவனமாகும், இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பில் களமிறங்குகிறது. கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் வர்மா எழுத, பெண் இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லுரு இப்படத்தை இயக்குகிறார். ஆன்மீகம் மற்றும் புராணங்களை சமகால சிக்கல்களுடன் கலந்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருந்து வரும் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் மற்றும் இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் அசத்தலான சூப்பர் ஹீரோவாகும்.

இப்படத்திற்கு வங்காளத்தின் வளமான கலாச்சார பின்னணியில் அமைக்கப்பட்ட “மஹாகாளி” என்ற தலைப்பை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த சக்திவாய்ந்த மற்றும் சமூகம் சம்பந்தப்பட்ட திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரே மாதிரியான கருத்துக்களை உடைத்து, அழகு தரத்தை மறுவரையறை செய்து, முக்கிய பாத்திரத்தில் கருமை நிற நடிகையால் காளி தேவியின் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சித்தரிப்பைக் கொண்டிருக்கும்.

காளி தேவியை அதிகமாக வழிபடும் பிராந்தியமான வங்காளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், அந்நிலத்தின் சாரத்தையும் அதன் ஆழமான வேரூன்றிய மரபுகளையும், அதிர்ச்சியூட்டும் காட்சியமைப்புகள் மற்றும் உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் கதையுடன் படம்பிடிக்கும்.

அறிவிப்பு போஸ்டரில் ஒரு பெண், புலியின் தலையை மெதுவாகத் தொடும் காட்சி இடம்பெற்றுள்ளது. பின்புலத்தில் குடிசைகளும் கடைகளும் தெரிகின்றன, மக்கள் பீதியில் ஓடுகிறார்கள். ஒரு பெர்ரிஸ் சக்கரம் தீப்பிழம்புகளில் காணப்படுகிறது. பெங்காலி எழுத்துருவில் வடிவமைக்கப்பட்ட டைட்டில் போஸ்டர் நடுவில் வைரம் போன்ற வடிவத்தைக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, அந்த பிரம்மாண்டத்தில், போஸ்டர் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது.

காளி தேவியின் கடுமையான மற்றும் இரக்க குணத்தால் ஈர்க்கப்பட்ட, அதிகாரம், நம்பிக்கை ஆகியவற்றின் காவியப் பயணமாக “மஹாகாளி” இருக்கும். இத்திரைப்படம் அவரது தெய்வீக சக்தியை மட்டுமல்ல, பாகுபாடு, உள் வலிமை மற்றும் ஒருவரின் அடையாளத்தை மீட்டெடுப்பது போன்ற கருப்பொருள்களையும் தொடும், இது பெரும்பாலும் கருமையான சருமத்தின் மதிப்பை மறுவரை செய்யும்.

இந்தியப் பெண்களின் பன்முகத்தன்மை மற்றும் அவர்களின் அடங்காத மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திரைப்படம், ஒருவரின் அடையாளத்தை முழுமையாகத் தழுவுவதில் உள்ள வலிமையை எடுத்துக்காட்டுகிறது. சமூக நெறிமுறைகளுக்கு சவால் விடும் வகையிலும், ஒதுக்கப்பட்ட அல்லது குறைவான பிரதிநிதித்துவம் பெற்றவர்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகச் செயல்படும் வகையிலும் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இணைந்து பணியாற்றுகிறார்கள். ஸ்மரன் சாய் இசையமைக்க, ஸ்ரீ நாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். படத்தின் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

“மஹாகாளி” திரைப்படத்தை, இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஐமேக்ஸ் 3டியில் கண்டுகளிக்கலாம். இந்த யுனிவர்ஸில் “ஹனுமான்” சமீபத்தில் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

“மகாகாளி” வெறும் திரைப்படம் அல்ல. இது உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை நோக்கிய இயக்கம்!

தொழில்நுட்பக் குழு:
எழுத்து : பிரசாந்த் வர்மா
இயக்கம் : பூஜா அபர்ணா கொல்லுரு
தயாரிப்பாளர்: ரிஸ்வான் ரமேஷ் துக்கல் வழங்குபவர்: RK துக்கல்
பேனர்: RKD Studios
இசை: ஸ்மரன் சாய்
கிரியேட்டிவ் டைரக்டர்: சினேகா சமீரா
ஸ்கிரிப்டிங் பார்ட்னர்: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி
விளம்பர வடிவமைப்புகள்: அனந்த் கஞ்சர்லா
மக்கள் தொடர்பு : யுவராஜ்