Take a fresh look at your lifestyle.

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தெலுங்கு மாநிலங்களுக்கு ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார்

7
ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் ரூ. 1 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வீடுகள் மற்றும் உடைமகளை இழந்தவர்களுக்கு உதவ ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள துயரங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், இந்த சூழ்நிலையில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்றார்.”ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட இழப்பு மற்றும் துன்பம் குறித்து நான் வருத்தமடைகிறேன். இந்த சவாலான நேரத்தில், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இரு மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்குகிறேன். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காகவும் நான் இறைவனிடம் வேண்டுக் கொள்கிறேன்” என்று அல்லு அர்ஜுன் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்தார்.