நாயகனான விஜய் கனிஷ்கா வள்ளலார் நெறிமுறைகளை பின்பற்றி எந்த உயிரையும் கொல்லக் கூடாது யாருக்கும் எந்த வித தீங்கும் விளைவிக்கக்கூடாது என்பதால் சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்கிற தீவிர கொள்கையுடன் தனது அம்மா சித்தாரா, தங்கை அபிநக்ஷத்ரா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
விஜய் கனிஷ்காவின் வாழ்க்கையில் திடீரென்று நுழையும் முகமூடி அணிந்த மனிதன் அவரது அம்மா மற்றும் தங்கையை கடத்தி வைத்துக்கொண்டு உன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் விஜய் கனிஷ்காவை இரண்டு கொலைகளை செய்யச் சொல்கிறான் .
முடிவில் அமைதியான குணம் கொண்ட விஜய் கனிஷ்காவை முகமூடி மனிதன் இரண்டு கொலைகளை என்ன காரணத்திற்காக கொலை செய்யச் சொல்கிறான் ?
முகமூடி மனிதரிடம் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிய அம்மா, தங்கையை விஜய் கனிஷ்கா காப்பாற்றினாரா ?
இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி சரத்குமார் இறுதியில் முகமூடி மனிதன் யார் என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஹிட் லிஸ்ட்’
இயக்குனர் விக்ரமனின் மகனான அறிமுக நாயகன் விஜய் கனிஷ்கா உணர்வுபூர்வமான நடிப்பில் தன் அம்மா, தங்கையை காப்பாற்றுவதற்காக வில்லன்களிடம் மோதும் காட்சிகளிலும் காவல்துறை மற்றும் முகமூடி மனிதன் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சிகளிலும் தேர்ந்த நடிகராக கதாபாத்திரத்துடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
ஹாலிவுட்டில் சில படங்கள் இதே பேட்டர்னில் வந்துள்ளன. ஸ்பைடர் படத்திலும் எஸ்.ஜே. சூர்யா மாஸ்க் மேனாக நடித்திருப்பார். ஜவான் படத்திலும் சில காட்சிகளில் ஷாருக்கான் அப்படி நடித்திருப்பார். ஆனால், இங்கே கடைசி வரை மாஸ்க் மேன் யார் என்பது தான் ட்விஸ்ட்டாகவே உள்ளது. அதிகம் படங்களை பார்க்கும் ரசிகர்கள் அந்த ட்விஸ்ட்டை ஸ்டார் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை போலவே ஈஸியாக கணித்து விடுவார்கள். அந்தளவுக்குத்தான் இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்கள் இயக்கி உள்ளனர். சாதாரண ஆடியன்ஸ்களுக்கு அந்த ட்விஸ்ட் ஒரு சுவாரஸ்யத்தை நிச்சயம் கொடுக்கும்