Take a fresh look at your lifestyle.

விமர்சனம்-‘கருடன்’படம் எப்படிஇருக்கு ?

175

பள்ளி பருவ சிறுவர்களாக சசிகுமாரும் ,உன்னி முகுந்தனும் இருந்தபோது பழக்கமாகும் ஆதரவற்ற சிறுவன் சூரி அவர்களுடனே வளர்கிறான்.

சிறுவனாக இருக்கும்போதே உன்னி முகுந்தனின் உயிரைக் காப்பாற்றி அவர் வீட்டில் அவருடைய பாட்டி வடிவுக்கரசி ஆதரவுடன் உன்னி முகுந்தனுக்கு விஸ்வாசமான வேலைக்காரராகவும் அதே சமயம், சசிகுமாரின் குடும்பத்தில் தாய் மாமனாக உயர்ந்த உறவாக வாழ்கிறார் .

இந்நேரத்தில் உயிர் நண்பன் சசிகுமாரே உன்னி முகுந்தனை அடிக்க முயன்றாலும் அவரையே அடிக்கக் கை ஓங்கும் அளவுக்கு சூரியின் விசுவாசம் உச்சத்தில் நிற்கிறது .…

இந்த நிலையில், அமைச்சர் ஆர் வி உதயகுமாரின் திட்டப்படி ஓடாத தியேட்டர் உரிமையாளர் மைம் கோபியின் சூழ்ச்சியினால் உயிர் நண்பன் உன்னி முகுந்தன் சசிகுமாருக்கு துரோகம் செய்ய முயற்சிக்க,,,ஒரு கட்டத்தில் கை குழந்தையுடன் தன்னை பார்க்க வரும் சசிகுமாரை வெட்டி சாய்க்கிறார் உன்னி முகுந்தன் .

இக்கட்டான இச் சூழ்நிலையில் குடும்பத்தில் ஒருவராக உறவு பாராட்டி பாசம் காட்டிய சசிகுமாரை கொலை செய்தவர்களை சூரி பழி வாங்கினாரா ? விஸ்வாசத்திற்காக தன்னை வாழ வைத்த முதலாளியான உன்னி முகுந்தனுக்கு பாதுகாப்பாக பக்க துணையாக நின்றாரா? என்பதை சொல்லும் படம்தான் ‘கருடன்’

கதையின் நாயகனாக சூரி சொக்கன் என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் அப்பாவியான மனிதராகவும், முதலாளியின் வெறித்தனமான விஸ்வாசியாகவும் அவரை நம்பிக் கேட்கப்படும் கேள்விக்கு அத்தனை உண்மைகளையும் சொல்லும் உண்மையினால் விளையும் சாதக பாதகங்களைப் பற்றி யோசிக்காமல் ஒப்புவிக்கும் இயல்பான நடிப்பில் நடிக்கும் சூரி,,,, அதிரடி நாயகனாக அவரது மெனக்கெடலான பாராட்டும்படியான உழைப்பு தன் கதாபாத்திரத்தை காப்பாற்ற ஆக்க்ஷன் காட்சிகளில் போராடுவது கண் முன்னே தெரிகிறது .

படத்திற்கு பலம் வாய்ந்த கதாபாத்திரங்களில் உயிர் நண்பர்களாக சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் கதையுடன் இணைந்து பயணித்திருக்கிறார்கள்.

சூரியை காதலிக்கும் நாயகியாக ரேவதி ஷர்மா ,உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் சசிகுமாரின் மனைவியாக வரும் ஷிவதா, உன்னி முகுந்தனின் மனைவி ரோஷினி ஹரிப்பிரியன் ,உன்னி முகுந்தனின் மாமனாராக வரும் முத்துராமன் , மைத்துனராக வரும் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ,பிரிகிடா சகா, வடிவுக்கரசி என நடித்தவர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்