Take a fresh look at your lifestyle.

ஸ்டார் திரைவிமர்சனம்

59

ஒரு பாமரனின் சினிமா கனவு ஸ்டார் ஆக வேண்டும் என்கிற எண்ணம்

நிறைவேறியதாஅல்லதுநிதர்சனமாக மாறியதா…

நன்றாக நடிக்கிற கவின் இசைக்கு இளவரசன் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஒரு சூப்பர் காம்போடு கிளம்பி இருக்கிறார் இயக்குனர்…

நடிகாரத் துடிக்கிறார் கலை( கவின்). சாதாரண குடும்பத்தை சேர்ந்த கலை பெரிய ஸ்டாராக நினைக்க பல போராட்டங்களை சந்திக்கிறார்எது நடந்தாலும் கனவை அடையாமல் ஓயவே கூடாது என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இளன். உங்கள் கனவை நினைவாக்க போராடுங்கள் என ஊக்குவிக்கிறது படம்.நடிகர்கள், நடிகைகள் தேர்வு நன்றாக இருக்கிறது. கவினின் நடிப்பு அருமை. அவரின் நடிப்பு, டான்ஸ் எல்லாமே சிறப்பு. கலை மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு இடையேயான பாசத்தை நம்மால் உணர முடிகிறது. நாயகிகளான ப்ரீத்தி முகுந்தன், அதிதி போஹன்கர் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். யுவனின் இசை படத்திற்கு பெரியபலம்.

அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆவலை தூண்டிவிட்டே படத்தை ஓட்டியிருக்கிறார் இளன். முதல் பாதியும், இரண்டாவது பாதியும் தனித்தனி படம் போன்ற உணர்வை கொடுக்கிறது. கலையின் வாழ்க்கையில் ஏற்படும் தோல்வியும் சரி, வெற்றியும் சரி எதார்த்தமாக காட்டப்பட்டிருக்கிறது.

ஒரு அடியில் பலமாக அடித்து இருந்தால்…வலித்திருக்கும்… வலிக்கிறது …ஆனால் பலம் கொஞ்சம் கம்மியாக இருக்கிறது…

ஸ்டார்- ஜொலிக்கிறான்…மின்ன வேண்டிய ஸ்டார் இது….