Take a fresh look at your lifestyle.

எல்.எஸ்.எஸ் திரைப்பட விமர்சனம்

4

ஜேபி ஃபிலிம்ஸ் (JB Films) சார்பில் தயாரிப்பாளர் பி.ரகு தயாரிப்பில் மகாலட்சுமி முருகன் இயக்கத்தில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், ஜாவா சுந்தரேசன், வினோதினி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் எல்எஸ்எஸ்.

கதை

கதாநாயகன் ஆதவ் கிருஷ்ணா
ஜாவா சுந்தரேசனிடம் பெரம்பூர் இரயில்வே ஸ்டேஷனுக்கு லிப்ட் கேட்டு செல்கிறார். இதனால் ஜாவா சுந்தரேசன்
ஆதவ் கிருஷ்ணா
வுக்கு லிப்ட் கொடுத்ததால் போலிஸ் விசாரனைக்கு அழைத்து விசாரிக்கப்படுகிறாரார். ஏனென்றால் லிப்ட் கொடுத்த ஆதவ் கிருஷ்ணா கதாநாயகி சிம்ரனை கடத்திவிட்டதாக புகார். விசாரனையின் முடிவில் சிம்ரன்தான்
ஆதவ் கிருஷ்ணாவை அழைத்து சென்றுவிட்டதாக தெரிய வர சிமாரன்
ஆதவ் கிருஷ்ணாவை எதற்காக அழைத்துசென்றார்?
ஆதவ் கிருஷ்ணா
வும் சிம்ரனும் காதலர்கள் என தெரிந்த சிம்ரன் அப்பா அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? காசிக்கு சென்ற
ஆதவ் கிருஷ்ணாவும் சிம்ரனும் அதில் சிம்ரன் காணாமல்போக ஆதவ் கிருஷ்ணா சிம்ரனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதெற்கெல்லாம்விடை சொல்வதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக ஆதவ் கிருஷ்ணா புதுவரவா இருந்தாலும் நடிப்பிலும் நடனத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக சிம்ரன் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ஜாவா சுந்தரேசன் நடிப்பும் அருமை.
வினோதினி, ரோஹித், தனஞ்செயன், முத்து, புவன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
என். எஸ். சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
சினேகன், அருண்பாரதி, மணி அமுதவன், இயக்குநர் சரண் பாடல் வரிகள் அருமை. அஷ்வமித்ரா இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

அசோக் அமிர்தராஜி காதல் கதையை சுவாராஸ்யமாக திரைக்கதையமைத்து எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் மகாலட்சுமி முருகன். பாராட்டுக்கள்.