Take a fresh look at your lifestyle.

’ஒடேலா 2’ வில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார்

37
இயக்குநர் அசோக் தேஜா இயக்கத்தில், மது கிரியேஷன்ஸ் & சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் இணைந்து அதிக பட்ஜெட்டில் உருவாகும் பல மொழி திரைப்படமான ’ஒடேலா 2’ வில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று காசியில் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது!

கடந்த 2022 இல் ஓடிடியில் வெளியான ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ பெரும் வெற்றிப் பெற்றது. அசோக் தேஜா இயக்கத்தில் உருவான இந்த க்ரைம் த்ரில்லர் கதையை சம்பத் நந்தி எழுதினார். இப்போது அதன் சீக்வல் ‘ஒடேலா 2’ என்ற பெயரில் உருவாகிறது. கதை, நடிப்பு, தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கதை மிகப்பெரியதாக இருக்கும்.

’ஒடேலா 2’ கதையில் நடிகை தமன்னா பாட்டியா நாயகியாக நடிக்கிறார். இந்தக் கதை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் ஓடிடியில் தனது சமீபத்திய ஹிட்களால் கவனம் ஈர்த்த தமன்னா இதில் இணைந்திருப்பது கதைக்கு கூடுதல் ப்ளஸ். இப்படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சம்பத் நந்தி திரைக்கதையில் அசோக் தேஜா இயக்கும் இப்படத்தை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் பேனர்களின் கீழ் டி மது தயாரிக்கிறார். இதன் வழக்கமான படப்பிடிப்பு இன்று காசியில் துவங்கியது.

’ஒடேலா 2’ கதை பல கோணங்களையும் ஆழமான வேர்களையும் கொண்டது. இதன் சீக்வல் கதை கிராமம், அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரிய மரபுகள் மற்றும் அதன் உண்மையான மீட்பர் ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எப்போதும் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை மையமாகக் கொண்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டர் மிகவும் ஆக்கப்பூர்வமாக உள்ளதாக ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது சிவபெருமானின் திரிசூலத்தைக் காட்டுகிறது. அவர் மல்லண்ண சுவாமியாகவும் வணங்கப்படுகிறார். எண் 2, திரிசூலம் மற்றும் மூன்று கோடிட்ட விபூதி, அதன் மேல் உள்ள சிவப்பு ஆகியவை சிவலிங்கத்தை நாம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையில் இடம்பெறும் ஆன்மீக விஷயத்தைக் குறிப்பதாக இது உள்ளது.

ஹெபா படேல், வசிஷ்டா என் சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தக் கதையில் விஎஃப்எக்ஸ் முதன்மையானதாக இருக்கும். அதே நேரத்தில் ‘ஒடேலா 2’வில் அனைத்துப் பிரிவிகளையும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கவனித்துக் கொள்வார்கள். சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்ய, ’காந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ராஜீவ் நாயர் கலை இயக்குநர். மேலும், படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான விவரம் விரைவில் வெளியாகும்.
நடிகர்கள்: தமன்னா பாட்டியா, ஹெபா பட்டேல், வசிஷ்டா என் சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்ஷி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பாளர்: டி மது,
திரைக்கதை: சம்பத் நந்தி,
பேனர்: மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ்,
இயக்குநர்: அசோக் தேஜா,
ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன். எஸ்,
இசையமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத்,
கலை இயக்குநர்: ராஜீவ் நாயர்,
மக்கள் தொடர்பு: ரேகா,
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ