Take a fresh look at your lifestyle.

‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

45

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.

கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சி மொழியான சினிமாவை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அத்தகைய சினிமாவின் தொலைநோக்கு பார்வையாளரான இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதியை , தனித்துவமான அறிவிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் படக்குழுவினர் கவர்ந்திருக்கிறார்கள். அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம்.. ஒரு அசாதாரணமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என உறுதி அளிக்கிறது. வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியத்துவம் வாய்ந்த மாநகரங்களில் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். இதற்காக விஜயவாடாவில் நடைபெற்ற பிரத்யேக அணிவகுப்பு… பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இதன் போது தனித்துவமான மற்றும் அற்புதமான முறையில் படத்தின் வெளியீட்டை, இந்த ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி என உற்சாகமாக அறிவித்தனர்.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான சி. அஸ்வினி தத் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு குறித்து பேசுகையில், ” வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ஐம்பதாவது ஆண்டை நிறைவு செய்யும் வகையில்.. எங்களுடைய சினிமா பயணத்தில் மே ஒன்பதாம் தேதியின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ முதல் விருது பெற்ற ‘மகாநதி’ மற்றும் ‘மகரிஷி’ வரை இந்த தேதி எங்கள் வரலாற்றில் தனி இடத்தை பொறித்துள்ளது. இப்போது அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்ற திறமையான நட்சத்திர கலைஞர்களுடன் தயாரான ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு எங்களுக்கு ஒரு சிறப்பான தருணத்தை குறிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் மைல் கல்லான ஐம்பதாவது ஆண்டுடன் இப்படம் இணைந்துள்ளது. மேலும் நாங்கள் எங்கள் பயணத்தை தொடரும்போது ..அதை இந்த திரைப்படம் மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.” என்றார்

இதனிடையே ‘கல்கி 2898 AD’ கடந்த ஆண்டு சான்- டியாகோவில் உள்ள காமிக்-கானில் அறிமுகம் செய்யும் போது உலகம் முழுவதும் பெரும் அதிர்வை உருவாக்கி, பாராட்டைப் பெற்றது. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் அவர்களை சூழ்ச்சிகள் நிறைந்த எதிர்கால உலகிற்கு அழைத்துச் செல்லவும் ‘கல்கி 2898 AD’ உறுதியளிக்கிறது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 AD’ ஒரு பன்மொழி திரைப்படமாகும். இது புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட.. எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு படைப்பாகும்.