Take a fresh look at your lifestyle.

ஹர்ஷ் மற்றும் சந்தனா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வை கோலாகலமாக நடத்திய லால்வானி குடும்பம்!

6

சென்னை: லால்வானி குடும்பம் சார்பில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் திங்கள்கிழமை ஹர்ஷ் மற்றும் சந்தனா ஆகியோரின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்படத்துறை, தொழில், சட்டத் துறை என பல்வேறு துறைகளைச சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த வரவேற்பு விழாவை பிரகாஷ் சந்த் லால்வானி, சஞ்சய் லால்வானி, பிரவீன் லால்வானி, சுஷில் லால்வானி மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, இனிய விருந்தோம்பலுடன் உபசரித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டு, மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழ் திரையுலகில் இருந்து, நடிகர்கள் ஜெயம் ரவி, பாபி சிம்ஹா, சதீஷ், ஸ்ரீகாந்த், கருணாஸ் மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் வரவேற்பு விழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். மேலும், பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்களான கலைப்புலி எஸ். தாணு, கெளதம் வாசுதேவ் மேனன், கே.இ. ஞானவேல் ராஜா, என். லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸ், டி. சிவா, எஸ். நந்தகோபால், ஸ்வரூப் ரெட்டி, பி. ஆறுமுககுமார், 7ஜி சிவா, ஏ.எல். அழகப்பன், எஸ். முருகானந்தம் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்ட திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சஜித் குரேஷி திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். மேலும், தொழில், சட்டம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.


சென்னையின் தொழில் மற்றும் திரைப்படத்துறையினருடன் லால்வானி குடும்பம் கொண்டுள்ள நீண்டகால நட்புறவையும் நெருக்கத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த திருமண வரவேற்பு விழா அமைந்தது. கலந்து கொண்ட விருந்தினர்கள், மணமக்கள் ஹர்ஷ் மற்றும் சந்தனாவின் புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்த அனைத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் லால்வானி குடும்பத்தினர் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்தனர்.