Take a fresh look at your lifestyle.

மம்பட்டியான் ஸ்டார்ஸ் வெப் சீரிஸ் விமர்சனம்

10

மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ (Mammatiyaan Stars) வெப் தொடர், கிரிக்கெட் மீதான காதல், நட்பு மற்றும் எமோஷனல் பயணங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஃபீல்-குட் தொடராகும். இது ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் 6 எபிசோடுகளாக வெளியாகியுள்ளது.

சிங்காரவேலன் தயாரிப்பில் சவிர் சுதாகர் இயக்கத்தில்
வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் தொடர் மம்பட்டியான் ஸ்டார்ஸ்.

கதை

கிராமத்தில் வசிக்கும் மூன்று இளைஞர்கள் மற்றும் பெண் ஒருவரும் சென்னை அணியின் கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஊருக்குள்ளேயேகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு சென்னையில் நடக்கும் கிரிக்கெட் பந்தயத்தை நேரில் பார்க்க வேண்டும், விளையாட்டு வீரர் தலயை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு ஊரில் பஞ்சாயத்து அலுவலகத்தில்
தங்களுக்கு சேரவேண்டிய ரன்னர் பணத்தை திருடிக்கொண்டு சென்னை வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு மைதானத்துக்குள் செல்ல போலியான டிக்கெட் கிடைத்து ஏமாற்றப்பட்டு அவர்களால் போட்டியை காண முடியாத நிலை ஏற்படுகிறது. எப்படியாவது சம்பாதித்து போட்டியை நேரில் காண வேண்டும் என்று முடிவு செய்யும் மூன்று இளைஞர்களும் அந்த பெண்ணும் என்ன பாடுபடுகிறார்கள் ஒரு கட்டத்தில் அவர்கள் எப்படி கிரிக்கெட் சூதாட்டத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள் தல கிரிக்கெட்டை பார்த்தார்களா? என்பதே இந்த வெப் சீரிசின் மீதிக்கதை.

வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் இவர்கள் கொடுத்த கதாப்த்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதிபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
பரத் தனசேகர் இசை ரசிக்கவைக்கிறது. பி.எம். ராஜ்குமாரின் ஒளிப்பதிவு அருமை.

கிரிக்கெட் சூதாட்டம் எப்படி நடக்கிறது என்பதை அக்குவேறு ஆணிவேராக இந்த வெப் சீரிஸில் சொல்லியிருப்பதோடு. எவ்வளவு மோசடி நடக்கிறது என்பதை தெளிவாக சொல்லி எல்லோரும் பார்த்து ரசிக்கும்படியான வெப்சீரிசை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சவிர் சுதாகர். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 3.5/5