Take a fresh look at your lifestyle.

எங்கள் தங்கம் திரைவிமர்சனம்

7

ராஜ் நிடிமொரு தயாரிப்பில் BV நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, திகந்த் மஞ்சாலே, கௌதமி, ஆனந்த் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் எங்கள் தங்கம்.

கதை

சமந்தா தன் கணவருடன்(திகந்த்) அவருடைய ஊருக்கு வருகிறார். 3 வருடம் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து சமந்தாவுடன் வாழ்ந்து வந்தவர் தன் அப்பா-அம்மாவை சமதானப்படுத்தவும், அப்படியே தான் தங்கை திருமணத்துகாகவும் சமந்தாவை அழைத்து கொண்டு தன் வீட்டிற்கு திகந்த் வருகிறார். கணவருடன் வந்த சமந்தாவுக்கு
மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கும் குடும்பத்தில், தன் கணவருகாகவும் அவர் தன் குடும்பத்துடன் இணைந்து வாழவேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக சமந்தாவும் அந்த குடும்பத்திற்கு ஏற்றது போல் மாறுகிறார்.
இந்த சூழ்நிலையில் ஒருவர் சமந்தாவை பின் தொடர்ந்து, நீ ஜான்சி தானே என கேட்க, சமந்தாவோ கொஞ்சம் பதட்டத்துடன் அங்கிருந்து நகர்கிறார். பின்தொடர்ந்து வந்தவர் ஜெயிலில் இருக்கும் கர்ணா என்பவரிடம் தான் ஜான்சியை பார்த்ததாக சொல்கிறார்.
பிறகு கர்ணாவும் ஜான்சியை தேடி வர, அந்த கர்ணாவுக்கு தெரியாமல் சமந்தா ஏன் மறைந்து வாழ்கிறார், கர்ணாவுக்கும், சமந்தாவுக்கும் என்ன பிரச்சனை? அந்த பிரச்சினைக்கு சமந்தா எப்படி தீர்த்து தன் கணவர் குடும்பத்தையும் எப்படி காப்பாற்றினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகியாக சமந்தா நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.
கர்ணாவாக குல்ஷன்தேவைய்யா, சமந்தா கணவராக திகந்த், மாமனாராக ஆனந்த், மாமியாராக ஆனந்த், தோழியாக நடித்தவர் என் இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் இசையும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.

இயக்குநர் BV நந்தினி ரெட்டி சமந்தாவுக்காக நல்லதொரு ஆக்ஷன் கதையை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 3.5/5