Take a fresh look at your lifestyle.

பிளாஸ்ட் திரைவிமர்சனம்

6

AGS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுபாஷ் கே ராஜா இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, பவன், ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பிளாஸ்ட்.
ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். அருண் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதை

கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுனிடம் தன் மகள் ப்ரீத்தி தன்னை ஒருவன் அடித்துவிட்டதாக சொல்ல அதற்கு அர்ஜூன் உன்மீது தவறு இல்லையென்றால் திருப்பி அடி என்று சொல்கிறார். அப்பாவிடமே கராத்தே கற்றுக்கொண்டு அந்த பையனை அடிப்பதோடு பெரியவளாகியும்
கண்முன் நடக்கும் அநியாயங்களை கண்டும் காணாமல் செல்லாமல்,
தவறு நடந்தால் தவறு செய்பவர்களை அடித்து நியாயம் பெற்று தருகிறாள். அப்பாவின் பேச்சைகேட்டு நீதி நியாயம் என்று நடப்பதால்
பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்வாரோ என தன் மகளை நினைத்து தினம் தினம் கவலைப்படுகிறார் அபிராமி. இப்படி இருக்கும் சூழ்நிலையில்
மறுபக்கம் வில்லன் ஜான் கொக்கேன் மிகவும் விலைஉயர்ந்த கனிமங்களை எடுக்க, ஒரு கிராமத்தையே அழிக்க திட்டமிடுகிறார். இதற்காக அமைச்சரை சந்தித்து அனுமதி கேட்க, இந்த திட்டத்தின் முழு மதிப்பு 7,000 கோடி அதில் எனக்கு 1,000 கோடி தந்துவிடுங்கள் என கேட்கிறார். அதற்கான பணத்தை ஏற்பாடு செய்து, முக்கிய நபர் ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஆனால், அந்த நபரால் பணத்தை அமைச்சரிடம் சேர்க்க முடியாமல் போலிஸிடம் மாட்டி குண்டடியோடு தப்பித்து விடுகிறார். குண்டடி காயத்துக்கு மாத்திரை வாங்க அர்ஜுன் சித்தப்பா கடைக்கு ஆள் அனுப்பு அங்கு பிரித்தி முகுந்தன் இருக்க மாத்திரை வாங்க வந்த அடியாள் பிரித்தி நகையை கழட்டி கொடுக்க சொல்ல அவரை அடித்து போலிஸில் ஒப்படைக்க
வில்லன் பிரச்சனையில் அர்ஜுன் குடும்பம் சிக்கிக்கொள்ள, இதன்பின் என்ன நடந்தது? அர்ஜுன் குடும்பம் இதில் எப்படி சிக்கினார்கள்? இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதை ஆக்ஷனுடன் சுவராஸ்யமா சொல்லியிருப்பதே பிளாஸ்ட் படத்தின் மீதிக்கதை

அர்ஜூன் கதாநாயகனாக நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். ரொம்ப நாளைக்குபிறகு அர்ஜூன் நடிப்பில் சண்டைக்காட்சிகளில் சிறப்பான படமாக அமைந்துள்ளது. அர்ஜூன் மனைவியாக அபிராமி நடிப்பிலும் சணாடைக்காட்சிகளிலும் அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார். அர்ஜூன் மகளாக பிரித்தி முகுந்தன் நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக ஜான் கொக்கேன், அர்ஜூன் சிதம்பரம் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். விவேக் பிரசன்னா, பவன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். ரவி பஸ்ருர் இசை படத்திற்கு பெரிய பலம். அருண் கிருஷ்ணா ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

அறிமு இயக்குநர் சுபாஷ் கே ராஜா எல்லோரும் ரசிக்கும்படியான விருவிருப்பான திரைக்கதையின் மூலம் நல்லதொரு ஆக்ஷன் படத்தை கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 4/5