Cache creek slot payouts

  1. Arena Casino Login App Sign Up: Microgaming was established in 2024 as the provider of online casino software for the iGaming market.
  2. Cresus Casino Login App Sign Up - Additionally, you will receive NetBet free spins to try out some of the great NetBet pokies with.
  3. Divas Casino Login App Sign Up: They can tell you the rules of archery as well as how to spot a fair promotion and plenty more in between.

Top tips for texas holdem poker

Cryptorino Casino No Deposit Bonus 177 Free Spins
Royal Challengers Bangalore has about 6 million followers on Instagram and 5 million fans on Twitter account and about 2.5 million subscribers on you tube.
Online Casino Real Money 120 Free Spins
We really enjoyed playing this and other Gamzix pokies machines.
This is possible with the Instant Play feature.

Golden sevens slot

Casino Westfield
Moreover they are a Microgaming production hence the games are of great quality and graphics.
Mr Play Casino 100 Free Spins Bonus 2025
In this review, we will tell you more about another place where to enjoy some of the best online blackjack experiences in the AU The Grand Ivy Casino.
Casino Online Gratis

Take a fresh look at your lifestyle.

கண்ணம்மா என்னம்மா” ஆல்பம் பாடல் வெளியீடு!

228

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “கண்ணம்மா என்னம்மா”. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார். இன்று இப்பாடலின் வெளியீட்டு விழா, சின்னத்திரைபிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகள், நடனம் என கோலகலமாக நடைபெற்றது. பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமு, நடிகை சுனிதா “கண்ணம்மா என்னம்மா” பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது…

ரியோ என் மச்சான். இவங்களோட திறமைய நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கொஞ்ச வாரம் முன்னாடி, என்னோட சாங் ரிலீஸானப்ப ரியோவை கால் பண்ணி, மச்சான் உன்ன கூப்பிடனுமானு கேட்டேன், ஆனா உன் போட்டோ இருந்தாவே, நான் வந்துருவேனு சொன்னான். அந்தளவு நாங்க க்ளோஸ். பவித்ரா பத்தி இங்க சொல்லனும் அவங்க ஒரு நல்ல குக். இவங்க ரெண்டு பேருமே எங்க செல்லம். இவங்க நடிச்ச பாடல் கண்டிப்பா பெரிய ஹிட்டாகும் நன்றி.

பாடகர் ஷாம் விஷால் பேசியதாவது..

பிரிட்டோ போன் செய்து கண்ணம்மா என ஒரு பாடல் இருக்கு பாடுகிறாயா எனக் கேட்டார். நான் கண்ணம்மா என ஆரம்பிக்கிற மாதிரி ஒரு பாடலும் பாடியதில்லை. அதற்காகத் தான் காத்திருந்தேன் அதனால் உடனே ஓகே சொன்னேன். கண்ணம்மா பாடல் எனக்கு மிக முக்கியமான பாடலாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

Noise & Grains சார்பில் கார்த்திக் பேசியதாவது..

எங்களை அணுகும் சுயாதீன கலைஞர்களை வைத்து, பல வருடங்களாகவே பாடல்களை உருவாக்கி வருகிறோம். கொரோனாவிற்கு பிறகு ஒரு மார்க்கெட் ஓபனாகியுள்ளது, அதனை சரியான வகையில் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அதைத்தான் தற்போது செய்து வருகிறோம். குட்டிப்பட்டாஸ் பாடல் செய்து கொண்டிருந்தபோது, ஏதேச்சையாக ரியோவை சந்தித்த போது, எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தோம் அப்போது தான் இந்த ஐடியா பற்றி சொன்னார் அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக செய்யலாம் என முடிவு செய்து இந்த பாடலை உருவாக்கினோம்.

Noise & Grains சார்பில் மகாவீர் பேசியதாவது…

Noise & Grains மூலம் இந்த முயற்சி பல வருடங்களாக நாங்கள் பேசி வந்ததுதான். இந்த நிறுவனத்தில் அனைத்தையுமே திட்டமிட்டு தான், பெரிய அளவில் செய்து வருகிறோம். அனிருத் வைத்து ஆரம்பித்ததில் இருந்து, நிகில் அண்ணாவை வைத்து பிரஸ் மீட் வைத்து, அறிமுகப்படுத்தியது வரை எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து வருகிறோம். சுயாதீன கலைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை அனைவரும் கொண்டாடும் வகையில் தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

இயக்குநர் பிரிட்டோ பேசியதாவது..

ரீகன் தான் இந்தப்பாடல் குறித்து முதலில் சொன்னான். ரியோவிடம் சொன்ன போது அவன் வேண்டாம் என்று தான் சொன்னான். அதன் பின் பாடல் கேட்ட பிறகு, அவனுக்கு பிடித்து, அதை வீடியோ செய்யலாம் என முடிவு செய்து, சின்னதாக நாங்களே மொட்டை மாடியில் எடுத்தோம். அதை ரியோ அவரது நண்பர்களான அபு மற்றும் சால்ஸ் இருவரிடமும் காட்ட, அவர்களுக்கு இது பிடித்து போய் உதவி செய்ய, இந்தப்பாடல் பெரிய அளவில் உருவானது. ஒளிப்பதிவாளர் S.மணிகண்ட ராஜா உதவியில் இந்தப்பாடலை ஒரே நாளில் உருவாக்கினோம். இந்தப்பாடல், மிகப்பெரிய அளவில் வெளியாவது மிகப்பெரும் மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி.

நடன அமைப்பாளர் அபு & சால்ஸ் கூறியதாவது…

எனக்கு முதன் முதலில் ஆல்பம் செய்த போது பயமாக இருந்தது. இப்போது பயம் போய் விட்டது. பிரிட்டோ மிகப்பெரிய சுதந்திரம் தந்தார். ரியோ, பவித்ரா பெரிய அளவில் ஒத்துழைப்பு தந்தனர். அவர்கள் நிறைய டேக் எடுக்கவில்லை. மிகச்சிறப்பாக செய்தார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. எங்களையும் உங்களுடன் இணைத்து கொள்ளுங்கள் நன்றி.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…

ஒரு பிரமாண்ட ஆடியோ லாஞ்ச் போல் இது இருக்கிறது. இதனை உருவாக்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பிரிட்டோ என் அன்புத்தம்பிக்கு வாழ்த்துக்கள். பாடல் மிக அருமையாக இருந்தது. பெரும் பிரபலங்களை மேடையிலேயே இயக்கும் நிகில் இப்போது படம் நடித்து முடித்து விட்டார் அவருக்கு வாழ்த்துக்கள். ரியோவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.

ஈரோடு மகேஷ் பேசியதாவது…

அன்புத்தம்பி ரியோ எனக்கு மிகவும் பிடித்தவர். ரியோவுக்கும், பவித்ராவிற்கும் வாழ்த்துக்கள். சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களை வளர்த்து விடும் Noise & Grains க்கு வாழ்த்துக்கள் நன்றி.

ராஜமோகன் பேசியதாவது..

விஜய் டீவி பிரபலங்கள் இங்கு நிறைந்துள்ளார்கள். குக் வித் கோமாளி மூலம் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்திய பவித்ராவிற்கு, இந்த மேடை கிடைத்திருப்பது மகிழ்ச்சி. எங்கு சென்றாலும் மனைவியை தைரியாமாக அழைத்து செல்லும் எங்கள் தம்பி ரியோவிற்கு வாழ்த்துகள். இந்தப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

டி எஸ் கே பேசியதாவது…

கண்ணம்மா எல்லோருக்கும் வெற்றியை தந்துள்ளது. அதே போல் ரியோ பவித்ராவிற்கு இந்த பாடல் வெற்றியை தர வாழ்த்துக்கள். பிரிட்டோ என்னுடன் காலேஜில் படித்தவர், அவருடைய மேடையில் இன்று நிற்பது மகிழ்ச்சி. கார்த்தி எதை செய்தாலும் பிரமாண்டமாக செய்கிறார்கள், அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கண்ணம்மா பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சூப்பர் சிங்கர் ஷோ இயக்குநர் ரௌஃபா பேசியதாவது..

சுயாதீன கலைஞர்கள் நிறைய பேர் வரவேண்டும் என இரண்டு வருடம் முன்னரே ஏ. ஆர்.ரஹ்மான் சார் சொல்லியிருக்கிறார். அதே போல் Noise & Grains புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. இந்தப்பாடல் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் ஜித்தன் ரமேஷ் பேசியதாவது…
முதன் முதலா ஹாலிவுட்டில், பாலிவுட்டில் வந்துகொண்டிருந்த ஆல்பம் தமிழில் வராதா என நினைப்பேன். இப்போது சில பாடல்கள் தமிழில் வந்து ஹிட்டாக ஆரம்பித்துள்ளது. இப்போது ரியோ நடித்து பாடல் வந்திருப்பது மகிழ்ச்சி. ரியோ, பவித்ரா இருவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.

பிக்பாஸ் புகழ் சோம்சேகர் பேசியதாவது…

இந்த பாடல் பிரிட்டோ ஒரு சாதாரண வெர்ஷனாக போட்டு காட்டினார். பின் இதனை முழுப்பாடலாக அழகாக உருவாக்கியுள்ளனர். பிரிட்டோ சூப்பராக செய்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துகள். பாடல் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.

நடிகர் பிரஜின் பேசியதாவது….

ரியோ எனக்கு பிறகு ஆங்கராக வந்தவர் என்றாலும் இன்று அவர் ஜெயிப்பது மிக மகிழ்ச்சி. பிரிட்டோ என்னுடன் நடித்துள்ளார் ஆனால் அப்போதே உனக்கு இயக்கம் தான் சரியாக வரும் என்று சொன்னேன். இப்போது இம்மாதிரி பாடல்கள் வந்து, ஜெயிப்பது மகிழ்ச்சி. எல்லோருக்கும் வெற்றி மிகவும் முக்கியம் ரியோ, பவித்ரா நன்றாக செய்துள்ளார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி.

நடன இயக்குநர் சாண்டி பேசியதாவது..

பாடல் செமையா இருக்கு, சூப்பரா இருக்கு. ஒரு பாடல் பார்த்தால் ஜாலியாக இருக்கனும் அதை சூப்பராக செய்திருக்கிறார்கள். அபு, சால்ஸ் டீமாக கலக்கியிருக்கிறார்கள். ரியோ முன்னாடியே இந்த பாடலை காட்டி விட்டார். பவித்ரா சூப்பரா டான்ஸ் ஆடுவார் இப்பாடலில் அருமையாக செய்துள்ளார். பிரிட்டோ நன்றாக இயக்கியிருக்கிறார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நடன இயக்குநர் ஃஷெரிஃப் பேசியதாவது..

ரியோ, பவித்ரா இருவருமே சூப்பர் டான்ஸர்ஸ் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அபு என்னிடம் வேலை பார்த்தார் அவர் தனியாக செய்த பாடலை பார்க்கத்தான் வந்தேன். இந்த மாதிரி தனி ஆல்பங்கள் வருவது மகிழ்ச்சி. இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் ரியோ பேசியதாவது…

என் நட்புக்காக இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஒரே நாளில் இதை பிளான் பண்ணி, பிரிட்டோ மிக அழகாக எடுத்து விட்டார். ஷாம் விஷால் அருமையாக பாடியுள்ளார். Noise & Grains மிக அழகாக வெளியிட்டு விட்டார்கள், அவர்களுக்கு நன்றி. இது அவர்களுக்கு ஆரம்பம் தான் இன்னும் நிறைய செய்வார்கள், எல்லோரும் பாடலை பார்த்து ரசியுங்கள் நன்றி.

பவித்ரா லக்‌ஷ்மி பேசியதாவது…

ஒரு ஆடியோ லாஞ்ச் என்பது ஒவ்வொரு நடிகருக்கும் கனவு. அது பெரிய படம் பெரிய நடிகர் இருந்தால் தான் நடக்கும் என்றில்லாமல், திறமையிருந்தால் அனைவருக்கும் அந்த மேடை கிடைக்கும் என்பதை நிரூபித்த Noise & Grains க்கு நன்றி. இந்த பாடலை ஷாம் விஷால் பாடியிருக்கிறார் என்றவுடனே, நான் ஓகே சொல்லிவிட்டேன். சூப்பர் சிங்கரிலிருந்தே அவருக்கு நான் ரசிகை. பிரிட்டோ இதனை அற்புதமாக இயக்கியிருக்கிறார். எனக்காக இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

இயக்கம் – பிரிட்டோ JB
இசை – தேவ் பிரகாஷ்
பாடல்கள் – A S தாவூத்
பாடியவர்கள் – ஷாம் விஷால்
நடனம் – அபு & சால்ஸ்
ஒளிப்பதிவு – S.மணிகண்ட ராஜா
படத்தொகுப்பு – கிருஷ்ணா குமார் கிரியேட்டிவ் டைரக்டர் – கார்த்திக் ஶ்ரீனிவாஷ்
பிஸினஸ் டைரக்டர் – மஹாவீர் அசோக் கண்டன்ட் டைரக்டர் – டோங்க்லி ஜம்போ
கலை – சசிகுமார்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
கலரிஸ்ட் – ப்ராங்ளின் V
பப்ளிசிட்டி டிசைனர் – சிவா தமிழரசன் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – வைஷாலி SV