Take a fresh look at your lifestyle.

தி ராஜாசாப் திரை விமர்சனம்

1

மாருதி இயக்கத்தில் பிரபாஸ்,, சஞ்சய் தத்,, ஜரினா வஹாப், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ரித்தி குமார், போமன் இரானி, த்யா, பிரபாஸ் சீனு, சமுத்திரக்கனி, ரங்கஸ்தலம் மகேஷ், சப்தகிரி, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ராஜாசாப்

கதை

ராஜாசாப் (பிரபாஸ்) அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட தனது பாட்டி கங்கம்மாவுடன் (ஜரினா வஹாப்) எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ராஜு தனது பாட்டியை மிகவும் நேசிக்கிறார். கங்கம்மா ஏறக்குறைய எல்லாவற்றையும் மறந்து விட்டாலும், அவர் காணாமல் போன தனது கணவர் கனகராஜுவின் (சஞ்சய் தத்) நினைவுகளை மட்டும் ஒருபோதும் மறப்பதில்லை. தனது கனவுகளில் தோன்றும் தனது கணவரை கண்டுபிடித்து திரும்ப அழைத்து வருமாறு பேரன் ராஜுவிடம் கேட்கிறார். தாத்தா கனகராஜு சமீபத்தில் ஹைதராபாத்தில் காணப்பட்டார் என்பதை அறிந்த ராஜு, தனது பாட்டியை பார்த்துக் கொள்ளும்படி தனது நண்பரிடம் (ரித்தி குமார்) கூறிவிட்டு, ஹைதராபாத்திற்கு பயணிக்கிறார். அங்கு, அவர் ஒரு கன்னியாஸ்திரியை (நிதி அகர்வால்) சந்திக்கும் போது அவள் மீது காதல் கொள்கிறார். பின்னர் பைரவி (மாளவிகா மோகனன்) அவரது வாழ்க்கையில் நுழைகிறார். தனது தாத்தாவை தேடி, ராஜு, பைரவி மற்றும் தனது நண்பர்களுடன் நர்சாபூர் காட்டில் உள்ள ஒரு அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு அவர் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையைக் கண்டறிகிறார். தனது தாத்தா இறந்துவிட்டார் என்றும், இப்போது அவர் ஒரு ஆபத்தான ஆவியாக இருக்கிறார் என்றும் அவர் கண்டுபிடிக்கிறார். ராஜு ஆழமாக ஆராயும்போது, தனது தாத்தா பல மாய சக்திகள் கொண்டவர் என்பதை அறிந்ததும் அவரது இருண்ட கடந்த காலத்தையும், அவரது செயல்களை வடிவமைத்த பேராசையையும் வெளிக்கொணர தொடங்கும் போது கனகராஜு ராஜுவையும் அவரது நண்பர்களையும் ஹிப்னாடிசம் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அப்போது என்ன நடக்கிறது? கனகராஜுவை ராஜு எப்படி எதிர்கொண்டார்? கனகராஜு யார்? அவருடைய நோக்கம் என்ன? அவரது கடந்த காலத்திற்குப் பின்னால் உள்ள உண்மை என்ன? ராஜாசாப்பின் வாழ்க்கையில் நுழையும் பைரவி (மாளவிகா மோகனன்), பிளெஸ்ஸி (நிதி அகர்வால்), மற்றும் அனிதா (ரித்தி குமார்) ஆகிய மூன்று பெண்கள் யார்? என்பதெற்கெல்லாம் விடை சொல்லியிருப்பதே படத்தின் மீதிக்கதை

பிரபாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நனறாக நடித்திருப்பதோடு நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
சஞ்சய் தத் கனகராஜு பாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார்.
கதாநாயகிகளாக மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் மூவரூம் ஙோடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
பிரபாஸின் பாட்டியாக வரும் ஜரினா வஹாப்,பின் நடிப்பும் அருமை
போமன் இரானி சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார்.

சத்யா, பிரபாஸ் சீனு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவை, பராவாயில்லை ரகம்.

சமுத்திரக்கனி, ரங்கஸ்தலம் மகேஷ்,சப்தகிரி என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறபாபாக நடித்துள்ளனர்.
தமனின் பாடல்கள் இசை மற்றும் பின்னணி இசை,ரசிக்க வைக்கிறது. கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு, படத்திற்கு பேரிய பலம். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு, கொஞ்சம் கத்நரி போட்டிருக்கலாம்.

இயக்குனர் மாருதி ஒரு வித்தியாசமான திகில் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து எல்லோரும் ரசிக்கும்படி கோடுத்துள்ளார். பாராட்டுக்கள்.