தினகரன் இயக்கத்தில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர் நடித்து நவம்பர் 28ல் ZEE5 ல் வெளியாகும் வெப்தொடர் ரேகை
கதை
இன்ஸ்பெக்டர் பாலஹாசன் மற்றும் கான்ஸ்டபிள் பவித்ரா ஜனனி ஹாஸ்டலில் ஒரு மாணவன் இறந்துவிட அது விபத்தா? கொலையா? என அந்த மரணத்தை பற்றி விசாரிக்க செல்கிறார்கள். ஆனால் அந்த மரணம் விபத்தல்ல, அதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என சந்தேகிக்கிறார்கள். அப்படி சாதாரணமாக விசாரிக்க துவங்கும் அந்த குற்றச் சம்பவம் அடுத்தடுத்த சில மரணங்களால் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. விபத்து என்பது மாறி கொலை என்பதை கண்டறிகிறார்கள். அவர்களை கொலை செய்தது யார்? இந்த சாதாரண மனிதர்களை கொன்றது யார்? அந்த ஐந்து பேருக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்த கொலைகள் நிகழ்ந்தது என்பதை ஒரு பரபர திரில்லராக சொல்வதேஇந்த வெப் சீரிஸின் மீதிக்கதை
கதாநாயகன் பாலஹாசன் துப்பரியும் போலிஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு காதலியாக உதவியாக கான்ஸ்டபுளாக பவித்ரா ஜனனியும் சிறப்பாக நடித்துள்ளார்.
அஞ்சலி ராவ், வித்தியாசமான கதாபாத்திரத்தில் வினோதினி வைத்தியநாதன்,
போபலன் பிரகதேஷ், ஸ்ரீராம், இந்திரஜித்
என இதில் நடித்திருக்கும் அனைவரூம் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்குனர் தினகரன். ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் சீரீஸ் Zee5-ல் எல்லோரும் ரசிக்கும் வகையில் சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.