Take a fresh look at your lifestyle.

ஒண்டிமுனியும் நல்லபாடனும். திரைவிமர்சனம்

5

திருமலை புரொடக்ஷன் கா. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில்
பரோட்டா முருகேசன், கார்த்திகேசன், சித்ரா நடராஜன், முருகன், சேனாபதி, விஜயன், விகடன் மற்றும் பலர் நடித்து நவம்பர் 28:ல் வெளியாகும் படம் ஒண்டிமுனியும் நல்லபாடனும்.

கதை

விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வருபவர் நல்ல பாடன். அவருக்கு ஓரு பெண் ஓரு மகன். அவரின் மகன் தவறுதலாக கிணற்றில் விழுந்து விடுகிறான். சிறு வயது மகன் உயிரைக் காப்பாற்ற காவல் தெய்வத்திடம் ஆடு வெட்டுவதாக வேண்டி கொள்கிறார். உயிர் பிழைத்த சிறு வயது மகன் படிப்பு முடிந்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறான். கல்யாணம் பண்ணி கொடுத்த மகளுக்கும் பிரச்சினை ஏற்பட சாமிக்கு கிடா வெட்டாததால் பிரச்சினை ஏற்படுகிறது என நினைத்து சாமிக்கு கேடா வெட்ட முடிவு செய்கிறான். ஆனால் ஏற்கனேவே இரண்டு தரப்புக்கு சாமி கும்பிட முடியாதபடி சண்டை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர்களை சமாளித்து சாமிக்கு கிடா வெட்டினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இதில் கதை நாயகனாக
பரோட்டா முருகேசன், சிறப்பாக நடித்துள்ளார். கார்த்திகேசன், சித்ரா நடராஜன், முருகன், சேனாபதி, விஜயன், விகடன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
விமலின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். நடராஜன் சங்கரனின் பிண்ணனி இசை படத்நிற்கு கூடுதல் பலம்.

கிராமத்து வாழ்வியலை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார் இயக்குநர் சுகவனம். பாராட்டுக்கள்.