தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில்
அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ்,அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு, சிவாஜி ராம்குமார்,தங்கதுரை, பேபி அனிகா, பிராங்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத் ,ஜி கே ரெட்டி ,பி எல் தேனப்பன், வேல ராமமூர்த்தி, ஓ.ஏ.கே.சுந்தர் ,பத்மன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் தீயவர் குலை நடுங்க.
கதை
எழுத்தாளர் ஜெபநேசன் காரில் சென்று கொண்டிருக்கும்போது ஓஎம்ஆர் சாலையில் இரவு 11. 40 க்கு தன் மகளிடம் தொலைபேசியில் பேசிகொண்டு சென்றிருக்கையில்
ஓர் இரு சக்கர வாகனத்தின் மூலம் விபத்து ஏற்படுத்தப்பட்டு காரில் இருந்து இறங்கிய ஜெபநேசனை கொடூரமாக கொலை செய்கிறான் ஒரு முகமூடி மனிதன் .அதற்குப் பிறகு அவரது நண்பரான கட்டுமானத் தொழிலதிபர் வரதராஜன் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலைகளைப் பற்றி விசாரிக்க மகுடபதி என்ற பெயர் கொண்ட இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையில் விசாரணையில் நடக்கிறது .தடயங்கள் சரியாகக் கிடைக்காமல் குற்றத்தின் நுனி புரியாமலும்,குற்றவாளிகளின் நிறம் தெரியாமலும் திணறுகிறார் போலிஸ் அதிகாரியான அர்ஜுன். அதற்குப் பிறகும் தொடர்ந்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. மற்றொருபுரம் மனநல குழந்தைகளை கவனித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரவீண்ராஜாவை காதலிக்கிறார். போலிஸ் அதிகாரியான அர்ஜுன் கொலை செய்பவர் யார்? என்பதை கண்டுபிடித்தாரா? கொலையாளி எதற்காக கொவை செய்கிறார்? ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் நிறைவேறியதா? இதெற்கெல்லாம் விடை சொல்வதே படத்தின் கதை.
விசாரணை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகுடபதியாக அர்ஜுன் சிறப்பாக நடித்துள்ளார்.
சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் காதலனாக பிரவீன் ராஜா நடிப்பும் அருமை.
கான்ஸ்டபிள் ஆக வரும் தங்கதுரை,
அர்ஜுனின் மேல் அதிகாரியாக ஓ.ஏ.கே.சுந்தர்,
பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அபிராமி வெங்கடாசலம்,
எழுத்தாளர் ஜெப நேசனாக லோகு, கட்டுமான தொழிலதிபராக சிவாஜி ராம்குமார், பேபி அனிகா, பிராங்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத் ,ஜி கே ரெட்டி ,பி எல் தேனப்பன், வேல ராமமூர்த்தி, ,பத்மன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பரத் ஆசிவகனின் இசையில் பாடலும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
இன்றைய பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பார்க்கும் படியான ஓர் ச்சரிக்கைப் படைப்பை கருவாக எடுத்துக்கொண்டு
க்ரைம் திரில்லர் பாணியில் எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் தினேஷ் லட்சுமணன். பாராட்டுக்கள்.
’ படத்தின் மீதிக் கதை.