Take a fresh look at your lifestyle.

மாஸ்க் திரைவிமர்சனம்

12

வெற்றிமாறன் கண்காணிப்பில், ஆண்ட்ரியா, சொக்கலிங்கம் தயாரிப்பில் விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா,
ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன், சார்லி, கல்லூரி வினோத் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மாஸ்க்.

கதை

அரசியல் கட்சித் தலைவரான மணிவண்ணன் (பவன்) வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற மக்களுக்கு ஓட்டுக்கு காசு கொடுக்க சுமார் 440 கோடி பணத்தை பாலியல் தொல்லை காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் போர்வையில் வலம் வரும் பூமி (ஆண்ட்ரியா) உதவியை நாடுகிறான். பூமியின் சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைத்து பணம் பட்டுவாடா பண்ணுவதற்கு தயார் நிலையில், இருக்கும் நிலையில், எம்.ஆர். ராதா மாஸ்க் அணிந்த ஒரு கூட்டம் பணத்தை திருடுகிறது. டிடெக்டிவ் ஏஜென்ட்டாக கோல்மால் வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வரும் வேலு (கவின்) எப்படி இந்த வலையில் சிக்குகிறான். எல்லா பிரச்சனைகளும் சரி செய்தாரா? இல்லையா? என்பதே மாஸ்க் படத்தின் மீதிக்கதை.

டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் வேலுவாக கவின் சிறப்பாக நடித்துள்ளார். ஆண்ட்ரியாவின் நடிப்பு மிரட்டல். அரசியல் கட்சி தலைவராக பவன் நடிப்பும் அருமை.
ஹீரோயினாக ரதி கதாபாத்திரத்தில் ருஹானி சர்மா சிறப்பாக நடித்துள்ளார். சார்லி, ஜார்ஜ் மரியன், ஆடுகளம்,
பிக் பாஸ் அர்ச்சனா
நரேன், கல்லூரி வினோத் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடல்கள் இசை நன்றாக இருந்தது. பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் எடுத்துக்கொண்ட கதையை எவ்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார். பணம் கொள்ளையடிப்பதற்கான காரணம் நல்ல சிந்நனை. ரத்தத்தில் வழுக்கி விழுந்து மரணிப்பதெல்லாம் டூமச் பாராட்டுக்ள்.