Take a fresh look at your lifestyle.

’சக்தித் திருமகன்’ – விமர்சனம்

78

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் – பாத்திமா விஜய் ஆண்டனி, மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிர்பலானி, செல் முருகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சக்தித் திருமகன்’

1989 ஆண்டு மயிலாடுதுறையில் பழங்குடி பெண் கற்பழித்து கொலை செய்யப்படுகிறார். அவருக்கு பிறந்த குழந்தையை போலீஸ் பணத்திற்காக ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள குப்பை கிடங்கில் வீசிவிட்டு சென்று விடுகிறார்கள்.

2025 ஆம் ஆண்டு சென்னை தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை கச்சிதமாக செய்து முடிக்க கூடியவர். தனது பெயர் வெளிவராமல் எவ்வளவு பெரிய சம்பவமாக இருந்தாலும், அதை திறமையாக செய்து முடிக்க கூடியவர்.

இந்நிலையில் வில்லன் சுனில் கிர்பலானியின் தங்கை கணவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்க இவரது பள்ளியில் படிக்கும் மாணவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்க அந்த மாணவன் தற்கொலை செய்து கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி பாலியல் துன்புறுத்தலில்  ஈடுபட்டதற்காக வில்லன் சுனில் கிர்பலானி தங்கை கணவரை தீர்த்து கட்டுகிறார்

இதே நேரத்தில் இந்திய அரசியலுடன் சேர்த்து சர்வதேச அளவில்  மிக பெரும் புள்ளியாக இருக்கும்  வில்லன் சுனில் கிர்பலானி, விஜய் ஆண்டனி மீது சந்தேகப்பட்டு தனி போலீஸ் படை அமைத்து அனைத்தையும் அபகரித்து அவரை அழிக்க நினைக்கிறார். 

முடிவில்  சுனில் கிர்பலானி திட்டத்தை முறியடித்து அவரிடம் இருந்து விஜய் ஆண்டனி தப்பித்து சாணக்கியத்தனமான  தனது வேலையை தொடர்ந்தாரா?

உண்மையில் விஜய் ஆண்டனி பின்னணி என்ன ? அவர் யார் ? என்பதை சமகால அரசியலுடன் சேர்ந்து  விறுவிறுப்பாக  சொல்லும் படம்தான் ‘சக்தித் திருமகன்’

 
கிட்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி படம் முழுவதும் கதா பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்

கதைகேற்றபடி நாயகியாக நடித்திருக்கும் திருப்தி ரவீந்திரா வில்லனாக நடித்திருக்கும் 

அமைதியான நடிப்பில் வில்லத்தனத்தில் மிரட்டும் சுனில் கிர்பலானி 
செல் முருகன், கிரண் குமார், ஷோபா விஸ்வநாத், ரியா ஜித்து, வாகை சந்திரசேகர் , மாஸ்டர் கேஷவ் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றவாறு உள்ளது. 
ஷெல்லி ஆர்.கேலிஸ்ட்  ஒளிப்பதிவு படத்திற்கு பலம் .
சமகால அரசியலை தோலுரிக்கும் வகையில் ஜீவனுள்ள வசனங்களுடன்   ஜனநாயகம் என்ற போர்வையில் பெரும் பணக்காரர்களுக்காக அரசு இயந்திரம் செயல்படுவதை சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அருண் பிரபு  
ரேட்டிங் : 4  / 5