அன்னை ஃபிலில் புரொடக்சன்ஸ் சார்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா, அஷ்வின் கக்குமனு, லாவன்யா, ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி ப்ரியா, பாரத் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தணல்’ .
சென்னையில் 2 வங்கி பணத்தை கொள்ளையடித்த 3 பேர் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வருகிறது. இதனையடுத்து போஸ் வெங்கட் தலைமையிலான போலீஸ் அவர்களை பிடிக்க செல்ல இரு தரப்பினர்களுக்கிடையே நடக்கும் துப்பாக்கி சூட்டில் கொள்ளையர்கள் 3 பேர் இறந்து விடுகிறார்கள்.
இதனையடுத்து போஸ் வெங்கட் தலைமையிலான போலீஸ்காரர்களை அஷ்வின் கொலை செய்து விடுகிறார். கடை நிலை காவலராக பணிக்கு சேர காவல் நிலையத்திற்கு செல்கிறார் நாயகன் அதர்வா அவருடன் நண்பர்கள் 5 பேரும் வேலையில் சேர வருகிறார்கள். .ஒரு நாள் முழுக்க போலீஸ் காவல் நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.
அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்ட்டர் இரவு ரோந்து பணிக்கு 6 போரையும் போக சொல்ல அப்போது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயற்சிக்கும் போது, அவர் தப்பித்து ஓடுகிறார். அவரை பின் தொடர்ந்து ஓடும் 6 பேரும், ஆள் நடமாட்டம் இல்லாத குடிசைப்பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
அப்போது, அங்கு வரும் அஸ்வின் காகுமனு சிக்கி கொண்ட போலீஸ்காரர்கள் ஒவ்வொருவராக கொலை செய்கிறார்.
ரேட்டிங் : 3.5 / 5