Take a fresh look at your lifestyle.

‘மிராய்’ – விமர்சனம்

77

பீபிள் மீடியா பேக்டரி சார்பில் TG விஷ்வபிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிப்பில் கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்க தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா சரண், ரித்திகா நாயக், ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மிராய் ’

கி.மு 232-ல் நடந்த கலிங்கத்து போருக்குப் பின் பேரரசன் அசோகன் தன்னிடம் இருக்கும் சாகாவரம் பெறக்கூடிய ரகசியமான சக்திகளை 9 புத்தகங்களில் அடக்கி அதை 9 மாவீரர்களிடம் ஒப்படைக்கிறார்.

பல வருடங்கள் கடந்த நிலையில் 9 வது புத்தகம் வைத்திருக்கும் ஸ்ரேயா சரண் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

அதி பயங்கர மந்திர சக்திகளின் வித்தையை அறிந்த வில்லன் மஞ்சு மனோஜ் எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி படைத்தவர்

வில்லன் மஞ்சு மனோஜ் அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அடைந்து உலகையே அழிக்க திட்டமிடுகிறார். இதை அறிந்துக்கொண்ட ஸ்ரேயா சரண் இதனை தடுப்பதற்கான தீர்வை தேடி இமாச்சலம் செல்கிறார்.

அங்கு மாமுனிவர் ஜெயராமை ( அகஸ்தியர் ) சந்திக்க,, இந்த பேரழிவை தடுக்க வேண்டும் என்றால் உன் மகனால் மட்டும்தான் முடியும் என்றும் அதற்காக நீ உன் மகனை தியாகம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இதற்காக ஸ்ரேயா சரண் தன் மகனை அனாதையாக வாரணாசயில் விட்டு செல்கிறார்.

24 வருங்களுக்கு பிறகு நாயகி ரித்திகா , ஸ்ரேயா சரணின்மகனான நாயகன் தேஜா சஜ்ஜாவை தேடி கண்டுபிடித்து மிராய் என்ற அற்புத சக்தி கொண்ட ஆயுதத்தை அடைவதற்கான வழிமுறையை கூறுகிறார்.

முடிவில் நாயகன் தேஜா சஜ்ஜா மிராயை கைப்பறினாரா? வில்லன் மஞ்சு மனோஜிடம் இருந்து 9 புத்தகங்களை கைப்பற்றி இந்த உலகை காப்பாற்றினாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘மிராய் ’

நாயகனாக நடித்திருக்கும் தேஜா சஜ்ஜா துறுதுறுவென இருக்கும் இளைஞராக நடித்து அசத்தியிருக்கிறார். அம்மா பாசம்,நட்பு, வீரம் என அனைத்திலும் தன திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் தன் திறமையை வெளிபடுத்துகிறார்.

நாயகியாக வரும் ரித்திகா சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா சரண் தியாக குணம் கொண்டவராக அப்பாவி மக்களை காப்பாற்ற எதையும் செய்யக்கூடிய கதாபாத்திரத்தில் கவனம் பெறுகிறார்.

அசத்தலான வில்லனாக நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வரும் மஞ்சு மனோஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

அகஸ்தியராக வரும் ஜெயராம், ஜெகபதி பாபு, மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கௌரா ஹரி இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

கார்த்திக் கட்டம்னேனி ஒளிப்பதிவு பிரமாண்டமாக இருக்கிறது.

அனைத்து தரப்பினரும் கொண்டாடி ரசிக்கும் ஃபேண்டஸி படமாக அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன், மிராய் என்ற கோளை மையப்படுத்திய கதையில், மந்திர புத்தகம், மந்திர ஊர், மந்திர வித்தைகள் கலந்த திரைக்கதை அமைப்பில் 9 புத்தகங்ககளில் இருக்கும் சக்திகளை அடைய நினைக்கும் வில்லனுக்கும் கதாநாயகனுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை மைய கருவாக வைத்து ரசிகர்கள் ரசிக்கும் பிரமாண்ட படைப்பாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி

ரேட்டிங்: 4 / 5