Casting : Saravanan, Namritha, Aroul D Shankar, Shanmugham, Thiruselvam, Vijayashree, Iniya Ram
Directed By : Balaji Selvaraj
Music By : Vibin Baskar
Produced By : 18 Creators – Sasikala Prabhakaran
சாதாரண நோட்டரியாக புகார்களை டைப் செய்து கொடுக்கும் பணி செய்து வரும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்கிறார். வழக்கு, வாதம் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு நீதிமன்றத்தின் வெளியே உட்கார்ந்திருக்கும் தன்னிடம் உதவியாளராக சேருவது சரியில்லை, என்று சரவணன் நிராகரிக்கிறார்.
இந்நிலையில் சண்முகம் என்பவர் தனது மகளை காணவில்லை என காவல்துறையிடம் முறையிட அவர்கள் வழக்குப் பதிவு செய்யாமல், அவரை விரட்டி அடிப்பதால் நீதிமன்ற வளாகத்தில் காணாமல் போன தன் மகளுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழக்கிறார்.
அதன்படி, தீக்குளித்து உயிரிழந்தவரின் மகள் கடத்தப்பட்டிருப்பதையும், அது பற்றிய புகாரை சம்மந்தப்பட்ட காவல் நிலையம் ஏற்க மறுத்த தகவலையும் சரவணன் நீதிமன்றத்தில் தெரிவித்து, பொதுநலன் வழக்கை ஹேபியஸ் கார்பஸ் வழக்காக பதிவு செய்கிறார். சம்மந்தப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிடுகிறார்கள்.
முடிவில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் எதற்காக தன் மகளுக்காக தீக்குளித்து உயிரிழந்தார்?
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த பொது நல வழக்குக்காக வாதாடும் சரவணன் இறுதியில் ஜெயித்தாரா?
காணாமல் போன பெண்ணின் நிலை என்ன? என்கிற பல கேள்விகளுடன் அடுத்தடுத்த எபிசோட்கள் பல திருப்பங்களுடன் சொல்லும் வெப் தொடர்தான் ’சட்டமும் நீதியும்’ இணையத் தொடர்.
தொடரை இயக்கியிருக்கிறார இயக்குனர் பாலாஜி செல்வராஜ்,