கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்க . கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் உடன் நடிப்பில் இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ள படம் ராஜ புத்திரன்
.ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார் . மவுஃபுல் ராஜா இசையமைத்ததுள்ளார். பாடல்களை வைரமுத்து, மோகன் ராஜன் எழுதியுள்ளனர். மே மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.விழாவில் படக்குழுவினருடன் திரையுலகப் பிரமுகர்கள் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் -விநியோகஸ்தர் கே .ராஜன், இயக்குநர் எஸ். . சந்திரசேகரன், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர்கள் வசந்த், பாண்டியராஜன், பேரரசு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, , நடிகர் ஆரி, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல்,தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.மே மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பரணி ஸ்டுடியோவில் நடந்தது.
படம் பற்றி இயக்குனர் மகா கந்தன் கூறும்போது, ‘ தந்தை மகன் இருவருக்கும் உள்ள பாசத்தை மையமாக வைத்து இக்கதை உருவாகி இருக்கிறது. வெற்றி கதை கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் பிரபு சாரை பிடிப்பதற்காக நான் கடும் முயற்சி செய்ய வேண்டி இருந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு அவரை சந்தித்து கதை கூறினேன் அவருக்கு பிடித்திருந்தது உடனடியாக ஒப்புக் கொண்டார். சின்னத்தம்பி போன்ற காலகட்ட படங்களில் பிரபு நடித்த கதாபாத்திரம் போல் ராஜபுத்திரன் படத்தில் அவரது கதாபாத்திரம் அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக குடும்பத்தினர் பெண்களுக்கு பிடிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இது முழுக்க ஒரு குடும்பப்படமாகவே உருவாகி இருக்கிறது அத்துடன் காதலும் இருக்கிறது.
இளைய திலகம் பிரபு பேசும்போது, “இதுவரை நான் 74 புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி இருக்கேன் . இந்தப் படமும் அதில் ஒன்று. இந்தப் படத்தில் நிறைய இளைஞர்களுடன் பணியாற்றினேன். எல்லோரும் அற்புதமான நடிகர்கள்; நல்ல டெக்னீசியன்கள்.. இந்தப் படத்தில் அண்ணன் தி ராஜேந்தர் பாடிய எனர்ஜியான பாடல் ஒன்றுக்கு நான் ஆடி இருக்கிறேன். ஆரம்பத்தில் நான் ஆட விரும்பவில்லை. ஆனால் வற்புறுத்தி ஆட வைத்து விட்டார்கள். படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்தது . அங்குள்ள மக்கள் அப்பா மீதும் என் மீதும் என் மகன் மீதும் அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் . படம் முப்பதாம் தேதி வருகிறது. அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் ஹீரோ வெற்றி, “இந்த படத்தில் எனக்கு அப்பவாக நடிக்கிறார் பிரபு சார். என் மகன் ராஜபுத்திரன் என்று படத்தில் ஒரு இடத்தில் சொல்வார் பிரபு சார். உண்மையில் தமிழ் சினிமாவில் ராஜபுத்திரன் பிரபு அண்ணன் தான். இந்த டைட்டிலுக்கு சரியான பொருத்தம் அண்ணன் மட்டுமே” என்கிறார்
விழாவில் பேசிய மன்சூர் அலிகான் , ” அடுத்து தமிழ்நாட்டை ஒரு நடிகன்தான் ஆளப் போகிறான். மக்கள் கையில் காசு இல்லை. அரசியலுக்கு வந்திருக்கும் விஜய், ‘ ஓட்டுப் போடுற எல்லாருக்கும் ரெண்டு லட்ச ரூபாய் பிக்சட் டெபாசிட்ல போடணும். அதை வைத்து மக்கள் ஏதேனும் தொழில் செய்யலாம் . அதுக்கு வரி இல்லை என்று அறிவிக்கணும்” என்றார்
மேலும் படத்தின் இயக்குனர் மகா கந்தன் கூறுகையில் இப்படத்தில் கதாநாயகியும் வெகு பொருத்தமாக அமைந்து இருப்பது மனதிற்கு திருப்தி அளிக்கிறது. படம் அனைத்து தரப்பினரரையும் சென்று சேரும் விதமாக உருவாகியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ” என்று கூறினார். விழா ஏற்பாடுகளை பிஆர் ஓ டைமண்ட் பாபு செய்திருந்தார்.