Take a fresh look at your lifestyle.

’நரிவேட்டை’ – விமர்சனம்

93

இந்தியன் சினிமா கம்பெனி சார்பில் திப்பு ஷான் மற்றும் ஷியாஸ் ஹாசன் தயாரிப்பில் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த மாதவன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’நரிவேட்டை’

கேரளாவில் வாழ்ந்து வரும் டொவினோ தாமஸ் படித்து முடித்துவிட்டு தனக்கு பிடித்த வேலை கிடைத்தால் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறார்.
இதே ஊரில் வங்கியில் வேலை பார்க்கும் நாயகி பிரியம்வதா காதலித்து வருகிறார்.

இந்நிலையில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலை டொவினோ தாமஸ்க்கு கிடைக்கிறது பிடிக்கும் பிடிக்காமல் இந்த வேலைக்கு செல்கிறார். இதே சமயம் மலைவாழ் மக்கள் தங்களுக்கு இடம் வேண்டும் என்ற கோரிக்கையை மையமாக வைத்து வயநாட்டில் அமைதியான முறையில்  அறவழியில்  போராட்டம் நடத்துகிறார்கள்.

இவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் உயரதிகாரி சேரன் தலைமையில், அங்கு போலீஸ் குவிக்கப்படுகிறது.  

அங்கு டொவினோ தாமஸும் உடன்  செல்கிறார்.  இந்நிலையில் அமைதியாக சென்ற போராட்டம் கலவரமாக மாறுகிறது.
இதில் பல அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். மலை வாழ் மக்களுக்காக நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்கிறார் டொவினோ தாமஸ்.
முடிவில் நீதிமன்றம்  சென்ற டொவினோ தாமஸ்ற்கு  தர்மபடி நியாயமான தீர்ப்புகிடைத்ததா? ?   அறவழியில் அமைதியான   போராட்டம்  நடத்திய மலை கிராம மக்களின்  நிலை என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ’நரிவேட்டை’  
 
போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருக்கும்  டொவினோ தாமஸ்ம் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். காதல்,பாசம்,சண்டை,செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பைவெளிபடுத்துகிறார் .
போலீஸ்  உயரதிகாரியாக வித்தி யாசமான வில்லன் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சேரன்.
நாயகியாக வரும் பிரியம்வதா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். போலீஸ்அதிகாரியாக வரும் சுராஜ்  கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. விஜய் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
 
மலைவாழ் மக்கள் போராட்டத்தை மைய கருவாக வைத்து போராடும் மக்கள்  அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினரிடம் மாட்டி கொண்டு படும் இன்னல்களை திரைக்கதையில் அழுத்தமாக சொல்லி  படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அனுராஜ் மனோகர் 
ரேட்டிங் : 3 / 5