”காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது” இயக்குநர் APG ஏழுமலை!
மண் சார்ந்த வலுவான கதைகள் அற்புதமான சினிமா அனுபவத்தைத் தரும்போது பார்வையாளர்கள் மற்றும் சினிமா விமர்சர்கள் மத்தியில் பாராட்டைப் பெறுகிறது. இந்த விஷயத்தை இயக்குநர் APG ஏழுமலையின் ‘மையல்’ படத்தின் பாடல்கள், டிரைய்லர் மற்றும் விஷூவல் புரோமோக்களில் பார்க்க முடிகிறது. ‘மையல்’ மே 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்து இயக்குநர் APG ஏழுமலை பகிர்ந்து கொள்கிறார்.
அவர் பகிர்ந்து கொண்டதாவது, “காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது. பார்வையாளர்களும் தங்களுடன் நிச்சயம் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். இதுபோன்ற தாக்கம் ஏற்படுத்தும் வலுவான கதையைக் கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. அவருடைய ஸ்ட்ராங் ரைட்டிங் மற்றும் தெளிவான கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள்தான் எனக்கு சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுக்க உதவியது. நடிகர்கள் சேது, சம்ரிதி தாரா மற்றும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். என்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தொழில்நுட்பக் குழுவினரும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ‘மையல்’ நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்”.
‘மையல்’ படத்தில் சேது கதாநாயகனாகவும் சம்ரிதி தாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா மற்றும் சி.எம். பாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு: ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி,
தயாரிப்பாளர்கள்: அனுபமா விக்ரம் சிங் மற்றும் ஆர். வேணுகோபால்,
கதை, திரைக்கதை மற்றும் வசனம்: எழுத்தாளர் ஜெயமோகன்,
இயக்கம்: APG ஏழுமலை,
இசை: அமர்கீத்.எஸ்,
ஒளிப்பதிவு: பால பழனியப்பன்,
படத்தொகுப்பு: வெற்றி சண்முகம்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர்.