Take a fresh look at your lifestyle.

பாலன் தி பாய் திரைவிமர்சனம்

8

ஜித்து மாதவன் கதையில் சிதம்பரம் இயக்கத்தில் பரசனா பலிங்கல், ஆதிசேஷன், டொவினோதாமஸ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும்‌ படம் பாலன் தி பாய்.

கதை

ஒரு கயவனால் வஞ்சிக்கப்பட்ட அபலையான பர்சானா பலிங்கல், அவனால் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்த நிலையில் அவனைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகிறாள்.

அங்கேயே பல வருடங்களைக் கழித்து சிறுவனான தன் மகனுடன் சிறையிலிருந்து வெளியே வரும் அவர். சமுதாயத்தில் யார் மீதும் நம்பிக்கை வைக்க முடியாமல் பல இடங்களில் பலவிதமான அடையாத்தோடு அலைகிறார்.

காரணம் தான் மகன் வஞ்சகனாகவோ, வஞ்சிக்கப்பட்டோ வாழக் கூடாது என்பதால்தான்.

மாறி மாறி ஓடும் வாழ்க்கைப் பாதையில் தனிமையில் வாழும் ஒரு மூதாட்டியை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கிடைக்க, ஒரு கட்டத்தில் அங்கேயே வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்து, மகனையும் பள்ளியில் சேர்க்கிறார்.

பள்ளி முடிந்து வரும் மகனை எப்போதும் அழைத்து வரும் அவர், மகனுக்கு ஒரு கட்டளை இடுகிறார். எவ்வளவு நேரம் ஆனாலும் தான் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் அது.

அப்படி ஒருநாள் அவன் காத்திருக்க, பர்சானா வரவில்லை. சிறுவனை போலீஸ் மீட்டுக் கொண்டுபோக, தாயும், மகனும் மீண்டும் இணைந்தார்களா என்பதுதான் மீதிக் கதை.

சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் பர்சானா சிறப்பாக நடித்துள்ளார்.
அவரது மகனாக வரும் சிறுவன் ஆதிசேஷன நடிப்பும் அருமை.
வளர்ந்த பதின்வயது சிறுவனாக வரும் ஜினள் நடிப்பும் அருமை.
போலீஸ் அதிகாரி ஜீன் பால் லாலின் வில்லத்தனம் மிரட்டல்.
டொவினோ தாமஸ். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.
சுஷின் ஷியாமின் இசையும், ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.

உணர்வுபூர்வமான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை விரும்புவோருக்கு இப்படம் ஒரு அருமையான திரையரங்கு அனுபவத்தைத் தரும். இயக்குநர் சிதம்மரத்துக்கு பாராட்டுக்கள்.

மதிப்பெண் 3.5/5