Take a fresh look at your lifestyle.

காந்தி டாக்ஸ் திரைவிமர்சனம்

9

கிஷோர் பாண்டுரங் பெலேக்கர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ் அரவிந்த் சாமி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் காந்தி டாக்ஸ். இசை ஏ.ஆர். ரஹ்மான்

கதை

உடல்நிலை முடியாத அம்மாவை வைத்துக் கொண்டு மும்பையில் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் விஜய் சேதுபதிக்கு பக்கத்து வீட்டு அதிதி ராவ் உடன் காதலும் ஏற்பட்டு விடுகிறது. அடுத்த கட்டத்துக்கு உயர வேண்டும் என்றால் நல்ல வேலை வேண்டும் என வேலை தேடி அலையும் இளைஞனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். பெரும் பணக்காரரான அரவிந்த் சாமிக்கு அந்த பணம் மூலமே ஒரு பெரிய பிரச்னை வர இவர்கள் இருவரும் சந்திக்கும் இடமும் அதன் பின்னர் நடக்கும் டிராவலும் கடைசியில் என்ன ஆகிறது என்பதும் தான் இந்த படத்தின் கதை.

ஏழையாக விஜய்சேதுபதியம் பணக்காரராக அரவிந்த்சாமியும் சிறப்பாக நடித்துள்ளனர். கதாநாயகியாக அதிதி ராவ் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
விஜய்சேதுபதி அம்மாவாக நடித்தவர் கதாநாயகி அம்மாவாக நடித்தவர் என
இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் பெரிய பலமாக படத்தை ரசிக்க வைக்கிறது. கரண் பி. ராவத்தின் ஒளிப்பதிவு அசத்தல்.

மனிதர்களை விட இந்த உலகில் பணம் எப்படியெல்லாம் பேசுகிறது. அதனால் விளையும் நன்மைகளை விட தீமைகள் என்னென்ன? ஊழல் பெருகிக் கொண்டே போவதால் சாமானிய மக்கள் எப்படி பாதிக்கின்றனர் என பல விஷயங்களை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேக்கர். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 4/5