Take a fresh look at your lifestyle.

வட்டக்கானல் திரைவிமர்சனம்

20

பித்தாக் புகழேந்தி இயக்கத்தில் ஆர் கே சுரேஷ், மீனாட்சி கோவிந்தராஜன், துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத், வித்யா பிரதீப், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் வட்டக்கானல்,

கதை

கொடைக்கானல் மலையில் இருக்கும் எழில் மிகு வட்டக்கானல் பகுதியில் நடக்கும் கதை.
அங்கே விளையும் போதைக் காளானைக் கைப்பற்றி காலம் காலமாக விற்று ஒரு போதை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் ஆர்.கே.சுரேஷ். அவரது எல்லா அடாவடி வேலைகளுக்கும் அவர் எடுத்து வளர்த்த துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் அவருக்கு உதவியாக இருக்கிறார்கள். ஆனால், ஆர்.கே.சுரேஷைக் கொல்ல எப்போதும் வித்யா பிரதீப் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் பின்னணி என்ன? கதாநாயகன்
துருவன் மனோ மீனாட்சி கோவிந்தராஜனைக் காதலிக்கிறார் அவரது காதல் கைகூடியதா?
என்பதெற்கெல்லாம் விடைசொல்வதே படத்தின் மீதிக்கதை

கதாநாயகனாக பாடகர் மனோ மகன் துருவன் மனோ நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக்காடசிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கதுநயகியாக முனாட்சி கௌவிநாதராஜன்ஃகொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். வில்லனாக ஆர் கே சுரேஷ் நடிபபில் மிரட்டியுள்ளார். ஆடுகளம் நரேன், வித்யா பிரதிப், கபாலி விஸ்வநாத், விஜய் டிவி சரத் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாததிரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
மாரிஸ் விஜயின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
எம்.ஏ.ஆனந்தின் ஓளிப்பதிவு படத்திற்குபேரிய பலம்.

இயக்குனர் பித்தாக் புகழேந்தி எடுத்துக்கோண்ட போதை கதையை இன்னும் கொஞ்சம் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். பாராட்டுக்கள்.