Thanthra Movie Review
வேதமணி இயக்கத்தில் அன்பு மயில், லொல்லுசபா சுவாமிநாநன், ஜாவா சுந்தரேசன், நிழல்கள் ரவி, சசிகுமார், சித்தா தர்ஷன், சுப்ரமணியன், மீனா, பிருந்தா கிருஷ்ணன், நரேஷ் ஜாக் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் தந்த்ரா.
கதை
நிழல்கள் ரவியின் மகன் அன்புமயில்சாமி வேலைக்கு போகாமல் ஜாலியாக நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். அவர் தன் மாமா லொள்ளு சபா சாமிநாதனின் ஊருக்கு போகிறார்.அங்கு மீனாவை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இதை அறிந்த லொள்ளு சபா சாமிநாதன்,அன்புமயில்சாமியின் குடும்பத்தினருடன் மீனாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்கின்றனர். மீனாவின் அப்பா சசிகுமார் சுப்பிரமணியன் தன் அந்தஸ்தை சொல்லி தயங்குகிறார். லொள்ளு சபா சாமிநாதன் அது ஒரு பிரச்சினை இல்லை என்று சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறார். அப்போது அங்கு வரும் ஒரு பெண் இந்த திருமணம் நடந்தால் அன்பு மயில்சாமி இறப்பார் என்று சொல்ல திருமணம் தடைபடுகிறது. மீனா தன் அப்பாவிடம் திருமண தடைக்கான காரணம் என்ன என்று கேட்கிறாள். அவர் ,தன் தம்பி பாதுகாத்து வந்த ஓலைச்சுவடிகளை அவன் மனைவி எரித்ததையும் எரிந்த சாம்பலில் இருந்து ஒரு புதிய ஓலை கிடைக்கிறது. அந்த ஓலைச்சுவடியில் எழுதி இருப்பதை தெரிந்து கொள்ள பெண் மந்திரவாதியை சந்திக்க ,ஓலையில் புதையல் பற்றி எழுதியிருக்கிறது. புதையலை தானே எடுத்து தருவதாக சொல்கிறாள். இருவரும் அதற்கு சம்மதிக்கின்றனர். மந்திரவாதியின் சதி திட்டத்தால் இருவரும் இறக்கின்றனர்.புதையல் எடுப்பது தடைப்படுகிறது. இதனால் கோபமான மந்திரவாதி உன் திருமணத்திற்கு தடையாக நிற்கிறாள் என்று சொல்கிறார். மந்திரவாதியின் சதி திட்டத்தை மீறி அன்பு மயில்சாமி ,மீனா திருமணம் நடந்ததா என்பது மீதி கதை.

கதாநாயகனாக அன்பு மயில்சாமி சிறப்பாக நடித்துள்ளார். லொல்லுசபா சுவாமிநாநன், ஜாவா சுந்தரேசன், நிழல்கள் ரவி, சசிகுமார், சித்தா தர்ஷன், சுப்ரமணியன், மீனா, பிருந்தா கிருஷ்ணன், நரேஷ் ஜாக் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். கணேஷ்சந்தரசேகர் பாடல்கள் இசை ரசிக்கவைக்கிறது. டிஜேவின் பிண்ணனி இசை படந்திற்கு பெரிய பலம். Hafiz M இஸ்மாயிலின் ஓளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்குநர் வேதமணி கிரைம் திரில்லர் கதையை ஏல்லோரும் ரசிகும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.