Take a fresh look at your lifestyle.

‘ஹவுஸ் மேட்ஸ்’- விமர்சனம்

209

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், ப்ளே ஸ்மித் ஸ்டுடியோஸ், சவுத் ஸ்டுடியோஸ் – சிவகார்த்திகேயன், எஸ்.விஜய பிரகாஷ் தயாரிப்பில் இயக்குனர் டி.ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், காளி வெங்கட், வினோதினி, அர்ஷா சாந்தினி பைஜு, அப்துல் லீ, தீனா, ஹென்ட்ரிக் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’.

நாயகன் தர்ஷன் – அர்ஷா சாந்தினி பைஜூ இருவரும் காதலிக்கிறார்கள். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தர்ஷன் வீடு ஒன்றை வாங்குகிறார்

தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நாயகி அர்ஷாவிற்கு அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறார்கள். ஆனால் அது பேய்களின் வேலை இல்லை என தெரிய வருகிறது.அதே வீட்டில் காளி வெங்கட்டும், அவரது மனைவி வினோதினியும் அவர்களது 10 வயது மகனுடன் வாழ்கிறார்கள்.

ஒரே வீட்டில் எப்படி இரண்டு குடும்பம் வாழ முடியும். காளி வெங்கட் வாழ்வது 2012ம் ஆண்டில், தர்ஷன் வாழ்வது 2022ம் ஆண்டில். வாழ்ந்து வருகிறார்கள். இந்த பிரச்சனையில் இரு குடும்பமும் சிக்கி தவிக்கிறார்கள்.

இறுதியில் தர்ஷன் – அர்ஷா சாந்தினி பைஜூ இருவரும் வீட்டில் வாழ்ந்தார்களா? இல்லையா? அல்லது காளி வெங்கட், – வினோதினி குடும்பம் அந்த வீட்டில் வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதே சொல்லும் ‘ஹவுஸ் மேட்ஸ்’

தர்ஷன் – அர்ஷா சாந்தினி பைஜூ இருவரும் கணவன் மனைவியாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காளி வெங்கட், – வினோதினி இருவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது. எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

இரு குடும்பம், வெவ்வேறு காலகட்டம் , ஒரே இடம் ஆகியவற்றை மைய கருவாக வைத்து படத்தின் முதல்பாதி காதல், மானுஷ்யம் என்று செல்ல இரண்டாம் பாதி பாசம், கருணை என்று விறுவிறுப்பாக கதையை நகர்த்தி வித்யாசமான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் இயக்குனர் டி.ராஜவேல்.

மதிப்பீடு : 3/5